இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ விஷால் சிக்கா பதவியைவிட்டு விலகிய நிலையில், இப்பதவிக்கான புதிய அதிகாரியை தேர்வு செய்யும் பணியில் இன்போசிஸ் மூழ்கியுள்ளது.
இந்தத் தேர்வில் கடைசிக் கட்டமாக இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றிய 2 முன்னாள் உயர்மட்ட நிர்வாகிகள் தேர்வாகியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
யார் அவர்கள்..?
புதிய நிர்வாகம்
இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நாராயணமூர்த்தி எழுப்பிய பிரச்சனையால், விஷால் சிக்கா சீஇஓ பதவியில் இருந்து விலகி மொத்த நிர்வாகப் பொறுப்பும் நந்தன் நீலகேனி கையில் மாறியது.
மூர்த்தி, விஷால் சிக்கா மற்றும் முந்தைய நிர்வாகத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை நிருபணம் செய்ய எவ்விதமான சாட்டியும் இல்லை என உள் விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் நந்தன்.
புதிய சீஇஓ
காலாண்டு மற்றும் உள் விசாரணையின் முடிவுகள் வெளியாகும் வரையில் புதிய சீஇஓவை தேர்ந்தெடுக்கும் பணியில் கவனம் செலுத்தாமல் இருந்தாலும், காலாண்டு முடிவுக்குப்பின் இப்பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது இன்போசிஸ்.
நேர்முகத் தேர்வு
சீஇஓ பதவியில் நியமிக்க இன்போசிஸ் நிர்வாகம் கடந்த சில வாரத்தில் ஆரக்கிள், கூகிள் போன்ற முன்னணி நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தில் பணியாற்றி வரும் முக்கிய உயர் அதிகாரிகளுக்கும் நேர்முகத் தேர்வு வைக்கப்பட்டது.
இதனுடன் இன்போசிஸ் நிறுவனத்தில் வெளியேறிய சில முக்கிய அதிகாரிகளிடம் நேர்முகத் தேர்வு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தனியார் நிறுவனம்
இன்போசிஸ் நிறுவனத்திற்குப் புதிய சீஇஓ நியமிக்கும் பொறுப்பைத் தனியார் நிறுவனத்திற்கு அளித்துள்ளது. இத்தனியார் நிறுவன ஊழியர்கள் மூலம் கிடைத்த தகவல் படி, இந்த முறையும் இன்போசிஸ் வெளியாட்களைத் தேர்வு செய்யும் முடிவுலேயே உள்ளது எனத் தெரிய வந்துள்ளது.
அதிக வாய்ப்பு
இதில் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய அதிகாரிகளுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் பி.ஜி. ஸ்ரீநிவாஸ் மற்றும் அசேக் வெமூரி ஆகியோர் முன்னாள் ஊழியர்கள் பட்டியில் கடைசிக்கட்ட தேர்வை அடைந்துள்ளனர்.
பி.ஜி. ஸ்ரீநிவாஸ்
இவர் விஷால் சிக்கா நியமனத்திற்கு முன்பு இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்.
இதன் பின் ஹாங்காங் நிறுவனமான PCCW நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராகப் பணியாற்றினார். இவருக்கு ஐரோப்பிய சந்தை வர்த்தகத்திலும், உற்பத்தி மற்றும் பொறியியல் துறையில் அதிக அனுபவம் உள்ளது.
அசோக் வெமூரி
இவரும் விஷால் சிக்கா நியமனத்திற்கு முன்பு இன்போசிஸை விட்டு வெளியேறினார். இதன் ஐகேட் நிறுவனத்தின் சீஇஓவாகப் பணியாற்றத் துவங்கினார். 2015ஆம் ஆண்டில் ஐகேட் நிறுவனத்தைக் கேப்ஜெமினி கைப்பற்றிய நிலையில் தற்போது இவர் ஜெராக்ஸ் கார்பரேஷன் நிறுவனத்தின் பிராசஸ் அவுட்சோர்சிங் நிறுவனமான கன்டூவென்ட் நிறுவனத்தின் சீஇஓவாகப் பணியாற்றி வருகிறார்.
வயது
ஆனால் இவர்களது தேர்விற்கு வயது ஒரு முக்கியத் தடையாகப் பார்க்கப்படுவதாகக் கருத்து நிலவுகிறது. பி.ஜி.ஸ்ரீநிவாஸ்-க்கு 55 வயது, அசோக் வெமூரி 50 வயது ஆகும் நிலையில் இவர்களைத் தேர்வு செய்தால் சரியாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.
விஷால் சிக்காவிற்கு வயது 50, இன்போசிஸ் நிறுவனத்தில் இவர் சேரும்போது இவருக்கு வயது 47.
நிறுவன ஊழியர்கள்
மேலும் தற்போது இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பட்டியலில் யூபி பிரவின் ராவ், மோஹித் ஜோஷி மற்றும் ரவி குமார் ஆகியோர் கடைசிகட்ட தேர்வில் இடம்பெற்றுள்ளனர்.
எளிய காரியமல்ல
தற்போதைய சூழ்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்திற்குப் புதிய சீஇஓவை நியமிப்பது எளியக் காரியமில்லை. காரணம், நிறுவனர்கள் அல்லாத ஒருவரை (விஷால் சிக்கா) நியமித்த காரணத்தில் 15க்கும் அதிகமான உயர் அதிகாரிகள் வெளியேறினர். உயர் நிர்வாக மட்டத்திலும் பல பிரச்சனைகள் வெடித்து வருகிறது.
மீண்டும் நிறுவனர்களை நியமித்தால் தற்போதைய சந்தைக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு அவர்களால் ஈடு கொடுக்க முடியுமா எனக் கருத்தும் நிலவுகிறது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications