ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உடன் ஏர்செல் சேரும் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளது ஏர்செல். இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்கனவே போட்டி வலிமை அடைந்து வரும் நிலையில் ஏர்செல் நிறுவனத்திடம் தற்போதைய சந்தைக்கு ஈடுகொடுக்கும் வகையில் 4ஜி அலைக்கற்றைகள் இல்லை.
இதனால் நிறுவனத்தை முழுமையாக மூடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் நிற்கிறது ஏர்செல்.
முக்கியப் பிரச்சனை
இந்திய டெலிகாம் சந்தையின் வர்த்தகம் தற்போது அதிகளவில் 4ஜி அலைக்கற்றைகளை மட்டுமே நம்பி இயங்க துவங்கியுள்ளது. காரணம் இந்தியாவில் பெரும்பாலான ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் அனைவரும் தற்போது 4ஜி சேவையைப் பயன்படுத்தும் போன்களையே வைத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளிக்கும் வகையில் ஏர்செல் நிறுவனத்திடம் 4ஜி அலைக்கற்றைகள் இல்லை.
நீதிமன்ற உத்தரவு..
ஏர்செல் நிறுவனத்திடம் இருக்கும் 2ஜி மற்றும் 3ஜி அலைக்கற்றைகளை விற்றுவிட்டு 4ஜி அலைக்கற்றை வாங்கத் திட்டமிட்டால், 2ஜி ஊழல் வழக்கின் ஒரு பகுதியாக ஏர்செல் நிறுவனம் வைத்துள்ள அலைக்கற்றைகளை விற்க கூடாது என உத்தரவிட்டுள்ளது.
தனியாக 4ஜி அலைக்கற்றை வாங்கலாம் என்றால் கடுமையான நிதி நெருக்கடியில் மாட்டிக்கொண்டுள்ளது ஏர்செல்.
கடன்
தற்போதைய நிலையில் ஏர்செல் நிறுவனத்தின் கடன் அளவு மட்டும் 20,00 கோடி ரூபாய்.
4ஜி அலைக்கற்றைகளை இல்லாத நிறுவனத்தை வாங்க தற்போது எந்த ஒரு போட்டி நிறுவனமும் விரும்பாது.
விற்பனை
இத்தகைய சூழ்நிலையில் ஏர்செல் நிறுவனத்தை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை. இதனால் ஏர்செல் நிறுவனம் தனது சொத்துக்களைத் தனித்தனியாக விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
இதன் படி அலைக்கற்றை மற்றும் 8.9 கோடி வாடிக்கையாளர்களை ஒரு நிறுவனத்திற்கும், தன்னிடம் இருக்கும் 40,000 டெலிகாம் டவர்களை வேறு ஒரு நிறுவனத்திற்கும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
திவால்
ஏர்செல் நிறுவனத்தைத் திவாலானது என அறிவித்து மூடப்பட்டால், இந்நிறுவனத்தின் மலேசிய தாய் நிறுவனமான மேக்சிஸ் உடன் மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும். மேலும் அடுத்தப் பல வருடங்களுக்குத் தாய் நிறுவனத்துடன் வழக்கு தொடரும்.
இத்தகைய பிரச்சனையை ஏர்செல் நிர்வாகம் தற்போது சிந்திக்காது.
திருப்பம்
இந்நிலையில் மேக்சிஸ் நிறுவனத்தின் தலைவரான டி அனந்த கிருஷ்ணன் மற்றும் நிர்வாக இயக்குனர் ரபேல் மார்ஷல் ஆகியோர் நீதிமன்றத்தின் முன் ஆஜர் ஆனால் ஏர்செல் நிறுவனத்தின் மீதான நீதிமன்ற தடைகள் நீக்கப்படலாம்.
மேலும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஏர்செல் உடனான கூட்டணி திட்டம் உடைந்ததிற்கும் இதுவே முக்கியக் காரணமாகும்.
மறுசீரமைப்பு
ஏர்செல் நிறுவனம் தனது கடன் அளவுகளைக் குறைப்பதற்காகத் தனக்கு அதிக வருவாய் அளிக்கும் பகுதிகளுக்கு மட்டும் சேவை அளிக்கலாம் என முடிவு செய்து செய்து தற்போது தமிழ்நாசு, ஜம்மு மற்றும் காஷ்மீர், வடகிழக்குப் பகுதிகளில் மட்டும் சேவை அளிக்கும் வகையில் மறுசீரமைப்புச் செய்ய முடிவு செய்ய உள்ளது.
டாடா டெலிசர்வீசஸ்
ஏற்கனவே அதிக நஷ்டத்தில் இருக்கும் டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து சேவையை அளித்துக் கூடுதல் நஷ்டத்தைப் பெறுவதை விட, டாடா டெலிசர்வீசஸ் போல நிறுவனத்தை அல்லது வர்த்தகத்தை விற்றுவிடலாம்.
ஏர்செல்
இந்திய டெலிகாம் சந்தையில் போட்டி அளவீடுகள் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ள நிலையில், ஏர்செல் நிறுவனத்தின் கடைசிக் கட்ட முடிவுகளைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications