காணாமல்போன அதிரடி வசனங்கள்.. இப்போ என்ன செல்லப்போகிறார் மோடி?

Written By:
Subscribe to GoodReturns Tamil

2016ஆம் ஆண்டில் இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியாக 80 சதவீதத்திற்கும் அதிகமாகப் புழக்கத்தில் இருக்கும் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவித்தார் பிரதமர் மோடி.

இந்த அறிவிப்பினால் ஒட்டுமொத்த இந்திய மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். பிரதமரின் இந்த முயற்சி தோல்வியைச் சந்தித்த நிலையில் திடீர் கொள்ளகை மாற்றத்தில் இறங்கியது மத்திய அரசு.

திடீர் மாற்றம்..

பிரதமரின் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மீதான தடை மக்களை மட்டும் அல்லாமல் வர்த்தகச் சந்தையையும் அதிகளவில் பாதித்தது. இதனைச் சுதாரித்துக்கொண்ட மத்திய அரசு தன் மீது கறைபடியாமல் பார்த்துக்கொள்ளும் வகையில் டிஜிட்டல் பணபரிமாற்றங்களை அதிகரிக்கப் பல்வேறு சேவை மற்றும் தளத்தை உருவாக்கி இந்தியாவில் பணமில்லா பொருளாதாரத்தை உருவாக்குவதாக அறிவித்தது.

டிஜிட்டல் பணபரிமாற்றம்

இதற்காக மத்திய அரசு அவசர அவசரமாகப் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட சில வாரங்களில் BHIM செயலி, யூபிஐ தளத்தை அதிரடியாக விரிவாக்கம் செய்தது, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைக்குச் சலுகை வழங்கியது என அனைத்து விதமான பணிகளையும் செய்தது.

வளர்ச்சி

மத்திய அரசின் திட்டத்தின் படி டிஜிட்டல் பரிமாற்றங்களின் எண்ணிக்கை வளர்ச்சியைக் காண துவங்கியது. இதற்கு முக்கியக் காரணம் ஏடிஎம்-இல் பணம் இல்லாமல் இருந்தது.

டிஜிட்டல் பரிமாற்றங்கள் அறிவிக்கப்பட்ட சில வாரங்களில் நாடு முழுவதும் பணப் பற்றாக்குறையால் ஏடிஎம் பரிவர்த்தனைகள் குறைந்து, டிஜிட்டல் முறையிலான பணப் பரிமாற்றம் அதிகரித்துக் காணப்பட்டது.

 

பணம் புழக்கம்

இதன்பின் சில வாரங்களிலேயே இந்தியா முழுவதும் போதுமான அளவிற்குப் புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தது. இதனைதொடர்ந்து வழக்கம்போல் மக்கள் டிஜிட்டல் பரிமாற்றங்களை விடுத்து ஏடிஎம்-இல் பணத்தை எடுத்த துவங்கிவிட்டனர்.

வங்கி பரிமாற்றங்கள்

இதுமட்டும் அல்லாமல் வங்கி கணக்குகள் மூலம் செய்யப்பட்டும் NEFT/IMPS பரிமாற்றங்களில் கூடப் பெரிய அளவிலான மாற்றமில்லை. மேலும் டிஜிட்டல் பரிமாற்றங்களில் டிசம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 160 சதவீதம் அளவிலான வளர்ச்சியைச் சந்தித்தாலும், ஆகஸ்ட் மாதத்தில் வெறும் 8.1 சதவீதம் மட்டுமே காணப்படுகிறது.

இதுவே தற்போதைய நிதர்சனமான உண்மை.

 

செயற்கை மாற்றங்கள்

டிஜிட்டல் மற்றும் பணம் வாயிலான பரிமாற்றங்களில் கடந்த ஒரு வருடத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தும் செயற்கை சூழ்நிலையால் அதாவது பணத் தட்டுப்பாட்டு நிலவிய காரணத்தால் நிகழ்ந்த மாற்றங்கள் மட்டுமே.

ஏடிஎம் ஸ்வைப் மெஷின்

ஆனால் இந்தியாவில் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் வர்த்தக நிறுவனங்களில் இருக்கும் ஏடிஎம் ஸ்வைப் மெஷின்களின் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்துள்ளது.

ஆனால் மக்கள் தற்போது அதிகளவில் பணத்தை ஏடிஎம்களில் எடுத்துக்கொள்ளும் காரணத்தால் இதற்கும் பயன் இல்லாமல் நிற்கிறது.

 

வல்லரசு நாடுகள்

பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜேட்லி உட்பட முக்கியத் தலைவர்கள் பலர் பணமதிப்பின் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவிலும் பணமில்லா பொருளாதாரத்தை இந்தப் பணமதிப்பிழப்பு மூலம் உருவாக்க முடியும் எனத் தெரிவித்தனர்.

வசனங்கள்

இந்தியாவில் எப்போதும் பணம் தான் ராஜா, டிஜிட்டல் பரிமாற்றம் எல்லாம் நடுவில் வந்தது. ஆகவே இந்தியாவின் அடிப்படை வர்த்தக முறையை மாற்றாமல் பணமில்லாத பொருளாதாரத்தை உருவாக்க முடியாது என்பது இந்தப் பணமதிப்பிழப்பு மூலம் நிருபனமாகியுள்ளது.

மக்களின் துயரம்

பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு அறிவிப்பைக் கேட்டுப் பணக்காரர்கள் அல்ல அன்றாடம் கஷ்டப்படும் ஏழைகள் தான் அதிர்ச்சி அடைந்தனர்.

கையில் இருந்த சில 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் வங்கிகளில் மணிக்கணக்கில் கால் வலிக்க நின்றது மறந்திருக்க முடியாது. மேலும் முறையான திட்டமிடல் எதுவும் இல்லாமல் அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு திட்டத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

 

மூடப்பட்ட ஏடிஎம்

ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க வரிசையில் நின்றபோது பலர் உயிர் இழந்தனர். மேலும் பல ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாமல் மூடிக்கிடந்தது குறிப்பிடத்தக்கது.

வழக்கம்போல் பயணம்

டெல்லியில் விவசாயிகள் தங்களது வாழ்வுரிமைக்காகப் போராடி கொண்டு இருந்தபோது பிரதமர் வெளிநாடு சென்றது போல் பணமதிப்பிழப்பை அறிவித்து விட்டு மக்கள் கையில் செலவுக்குப் பணம் இல்லாமல், ஏடிஎம்மிலும் பணம் இல்லாமல் அல்லாடிக் கொண்டிருந்த வேளையில் மோடி ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது மக்கள் கவனிக்க வேண்டிய ஒன்று.

அருண் ஜேட்லி

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி பணமதிப்பிழப்புத் திட்டம் வெற்றி என்று கூறியுள்ளார். இதுகுறித்து முழுமையான செய்தியை படிக்க இதைக் கிளிக் செய்யுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

1st Anniversary of demonetisation, cash is still king

1st Anniversary of demonetisation, cash is still king
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns