இந்தியாவில் பணமதிப்பிழப்பு அமல்படுத்தியதால் வருமான வரி தாக்கல் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்துள்ளனர் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்கள் சந்திப்பில் பல முறை கூறியுள்ளார்.
ஆனால் அரசு தரவுகளை பார்த்தால் இது முற்றிலும் முறன்பாடாக உள்ளது.
ஏப்ரல் - ஆகஸ்ட்
2017ஆம் நிதியாண்டில் ஏப்ரல் - ஆகஸ்ட் மாத காலக்கட்டத்தில் நாட்டில் வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இந்த உயர்வு முற்றிலும் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்தியதால் தான் நிகழந்தது என கூறப்பட்டது.
வளர்ச்சி
வருமான வரி தாக்கல் எண்ணிக்கை கடந்த வருடத்தை விடவும் 25 சதவீதம் வரையில் அதிகரித்தது உண்மை தான், ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இதன் எண்ணிக்கை கிட்டத்தட்ட இதே அளவில் தான் அதிகரிக்கிறது.
இதற்கும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்பதை நிருபனம் செய்யும் தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது.
6 வருடங்களின் தகவல்கள்
வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கையில் கடந்த 6 வருடத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பார்த்த 2017ஆம் ஆண்டில் சற்று குறைவான அளவிலேயே உயர்ந்துள்ளது. இதன் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கையில்
ஏப்-ஆகஸ்ட் 13 காலத்தில் - 52 சதவீத வளர்ச்சி
ஏப்-ஆகஸ்ட்14 காலத்தில் - 12.5 சதவீத வளர்ச்சி
ஏப்-ஆகஸ்ட்15 காலத்தில் - 16 சதவீத வளர்ச்சி
ஏப்-ஆகஸ்ட்16 காலத்தில் - 40 சதவீத வளர்ச்சி
ஏப்-ஆகஸ்ட் 17 காலத்தில் - 24 சதவீத வளர்ச்சி
வரி செலுத்துவோர் எண்ணிக்கை
2016ஆம் ஆண்டில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 40 சதவீம் வரையில் உயர்ந்துள்ள நிலையில் 2017ஆம் ஆண்டில் வெறும் 24 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.
வரி தாக்கல் எண்ணிக்கை
வருமான வரிதுறையின் மின்னணு வரி தாக்கல் தளத்தில் இருந்து கிடைத்த தகவல் மூலம் கடந்த 6 வருடத்தில் வருமான வரி தாக்கல் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை பார்த்தால் இந்த வருடம் பெரிய அளவில் மாற்றம் ஏதுமில்லை என்பதை உறுதியாகியுள்ளது.
2012-13 நிதியாண்டில் - 31 சதவீத வளர்ச்சி
2013-14 நிதியாண்டில் - 38 சதவீத வளர்ச்சி
2014-15 நிதியாண்டில் - 15 சதவீத வளர்ச்சி
2015-16 நிதியாண்டில் - 27 சதவீத வளர்ச்சி
2016-17 நிதியாண்டில் - 22 சதவீத வளர்ச்சி
ஏப்-ஆகஸ்ட் 2017 வரையில் - 25 சதவீத வளர்ச்சி
காங்கிரஸ் ஆட்சியில்
வருமான வரி தளத்தில் இருக்கும் தகவல்களை பார்க்கும் போது காங்கிரஸ் ஆட்சியின் கடைசி இரு வருடத்தில் 30 சதவீதத்திற்கும் அதிகமான கிட்டத்தட்ட 38 சதவீதம் வரையிலும் அதிகரித்துள்ளது.
அதேபோல் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கையும் 52 சதவீதம் வரையில் அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
நிதியமைச்சகம்
பணமதிப்பிழப்பால் வருவான வரி தாக்கல் மற்றும் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கையில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் இல்லை என்பதை உறுதியாகியுள்ளது.
இதன் நிதியமைச்சகத்தின் தரவும் சற்று முறன்படுகிறது.
புதிதாக வரி செலுத்தியோர் எண்ணிக்கை
2016-17 நிதியாண்டில் புதிதாக வருமான வரி செலுத்தியோர் எண்ணிக்கை 91 லட்சம் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், பொருளாதார ஆய்வு இதனை 80.7 லட்சம் என கணக்கிட்டுள்ளது.
60 லட்சம் பேர்
மேலும் மத்திய அரசும் 2017ஆம் ஆண்டில் ஏப்ரல் - ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 25 சதவீதம் அல்லது 60 லட்சம் பேர் அதிகரித்துள்ளதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஆகவே பணமதிப்பிழப்பால் வருமான வரி தாக்கல் எண்ணிக்கையில் பெரிய அளவிலான மாற்றமில்லை.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications