டெல்லி: ஷாஹீன் பாக்கில் ஒரு தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் வாடிக்கியாளர் ஒருவருக்குப் பணம் எடுக்கும் போது பாதி மட்டும் அச்சடிக்கப்பட்ட 2,000 ரூபாய் நொட்டு வந்துள்ளது பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதி மட்டும் அச்சடிக்கப்பட்ட 2,000 ரூபாய் நோட்டைப் பார்த்த வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்ததுடன் வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டதுடன் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.
வழக்கு
இது குறித்து ஐபிசி பிரிவு 420-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஜமியா பொலிஸ் நிலையம் காவல் நிலையம் விசாரித்து வருவதாக டிசிபி ரோமில் பானியா கூறினார்.
நிகழ்வு எப்படி நடந்தது
திங்கட்கிழமை மதியம் தனது காய் கறி அங்காடியில் இருந்து ஷாஹீன் பாக்கில் ஒரு தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் 10,000 ரூபாய் பணத்தினை எடுக்க முயன்ற வாடிக்கையாளருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
பணம் எடுக்கும் போது என்ன ஆனது?
ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து 10,000 ரூபாய் எடுத்த போது 2,000 ரூபாய் நோட்டுகள் 4, 500 ரூபாய் நோட்டுகள் 3 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் 5 வந்துள்ளது. இதனை எண்ணி சரிபார்க்கும் போது ஒரு 2,000 ரூபாய் நோட்டு மட்டும் பாதி 2000 ரூபாயாகவும், பாதி வெள்ளைத் தாளாகவும் டே போட்டு ஒட்டப்பட்டு இருந்துள்ளது என்ற காவல் துறை தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர் சேவை மையம்
அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் முதலில் தான் கணக்கு வைத்து யெஸ் பாங்க் வாடிக்கையாளர் சேவை மையத்தினை அணுகியுள்ளார். அவர்கள் அருகில் உள்ள போகல் கிளையில் புகார் அளிக்கும்படி தெரிவித்துள்ளனர். பின்னர்க் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சில்டரன்ஸ் பாங்க் ஆப் இந்தியா பெயரில் 2,000 ரூபாய் நோட்டு
சில மாதங்களுக்கு முன்பு டெல்லி சங்கம் விஹார் எஸ்பிஐ ஏடிஎம் மையம் ஒன்றில் சில்டரன்ஸ் பாங்க் ஆப் இந்தியா பெயரில் 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் வந்தது குறிப்பிடத்தக்கது. இதில் ஏடிஎம் மையத்தில் பணத்தினை வைத்த நிறுவனத்தின் மோசடி நடவடிக்கை என்பதும் தெரியவந்தது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications