பணமதிப்பிழப்பு.. மறக்கமுடியாத கொடூரம்..

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது எனப் பிரதமர் மோடி அறிவித்து முழுமையாக ஒரு வருடம் முடிந்தது. மத்திய அரசு அதனை எவ்வளவு தான் வெற்றி எனக் கூப்பாடு போட்டாலும், மக்களின் உண்மை கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் அனல் பறக்கிறது,

இதன் வாயிலாக இன்று டிவிட்டரில் #DeMoDisaster ஹேஷ் டேக் டிரென்டாகியுள்ளது.

பணமதிப்பிழப்புக் குறித்துச் சமுக வலைத்தளமான பேஸ்புக்கில் செய்த பதிவின் மூலம் மக்களின் கண்ணீர் சிந்திய தருணத்தைக் கண் முன்னே கொண்டு வந்துள்ளார்.

வரவேற்பு

வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பை மறுநாளே வரவேற்ற கும்பலில் நானும் ஒருவன்.. எதிர்ப்பா ளர்களை சாந்தப்படுத்த பதிவுகளை போட்டவன்.

தான்தோன்றித்தனம்

தான்தோன்றித்தனம்

நாள் ஆக ஆகத்தான் புரிந்தது, யாரையும் கலந்தா லோசிக்காமல், முன்னேற்பாடே இல்லாமல் மோடி, தான்தோன்றித்தனமாக அறிவித்திருக்கிறார் என்பது. நிதியமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநர், நிதித்துறையின் செயலாளர்கள் என எவரையும் கருத்து கேட்காமல் சில நிமிடங்களில் பேரழிவுக்கு வித்திட்டிருக்கிறார்..

பொறுமை காத்தோம்

பொறுமை காத்தோம்

இரண்டு நாள் என்றார்கள். பத்து நாட்கள்கூட பொறுத்திருந்தோம்.. ஆனால் கையில் மை, திருமண செலவுக்கு கட்டுப்பாடு என எவ்வளவு தூரம் கேவலப்படுத்தினார்கள்..

 4,000 ரூபாய்

4,000 ரூபாய்

நாலாயிரத்தை வாங்க நாடு முழுவதும் பிச்சைக்கா ரர்களாய் அலையவிடப்பட்ட கொடுமை,, பணப்பு ழக்கம் இல்லாததால் லட்சக்கணக்கில் அழிந்த சிறு தொழில்கள் மற்றும் குறு வணிகம்..

முக்கியமான செலவுகள்

முக்கியமான செலவுகள்

மருத்துவ செலவுக்கு பணம் எடுக்கமுடியால் தவித்த மக்கள், வங்கி வாசலிலும் ஏடிஎம் கியூவிலும் நெரிசலில் சிக்கி மாண்டுபோன 165 சாமான்யர்கள்.. எந்த பெரும்புள்ளியும் சாகவில்லை..

இரண்டு மாதங்கள் ஆகியும்கூட ஏடிஎம்களை புதிய நோட்டுக்க ளுக்கு ஏற்ப வடிவமைக்காமல் எவ்வளவு அலட்சியம்..

இன்றைக்கு அரசு தரப்பில் இவ்வளவு நன்மைகள் விளைந்துள்ளன என்று சொல்கிறார்கள்.. அரசு என்ன சப்பை கட்டு கட்டினாலும் சரி..

 

135 கோடி இந்தியர்கள்

135 கோடி இந்தியர்கள்

அருமையாக ஒரு வாரத்தில் முடித்திருக்கவேண்டிய விஷயத்தை கையாள திறமையில்லாமல், 135 கோடி இந்தியர்களை, சொந்த பணத்திற்காக கையேந்த வைத்தது எந்த காலத்திலும் மறக்க முடியாத.. மன்னிக்கமுடியாத குற்றம்..

100 சதவீத கோபத்தில்..

டிரைவிங்கே தெரியாதவன் கையில் கன ரக வாகனம் ஓட்டுவதற்கு கிடைத்த கதைதான்..100 சதவீத கோபத்தில் ஒரு சதவீத கோபம்தான் இந்த பதிவு. காதில் கேட்ட நிஜக் கண்ணீர்கதைகள் அப்படி..

#DeMoDis..." data-gal-src="http:///img/600x100/2017/11/08-1510129222-modianddemodisaster-08-1510124007.jpg">
தெறிக்கவிடும் நெட்டிசன்கள்

தெறிக்கவிடும் நெட்டிசன்கள்

<strong>#DeMoDisaster டிவிட்டரில் தெறிக்கவிடும் நெட்டிசன்கள்..!</strong>#DeMoDisaster டிவிட்டரில் தெறிக்கவிடும் நெட்டிசன்கள்..!

இப்படியும் ஒரு வேலை..! இதற்கு ..." data-gal-src="http:///img/600x100/2017/11/08-1510129230-hug1-08-1510122908.jpg">
சம்பளம் வேற..!

சம்பளம் வேற..!

<strong>இப்படியும் ஒரு வேலை..! இதற்கு சம்பளம் வேற..!</strong>இப்படியும் ஒரு வேலை..! இதற்கு சம்பளம் வேற..!

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

unforgetable Demonetisation #DeMoDisaster

unforgetable Demonetisation #DeMoDisaster
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X