அனில் அம்பானிக்கு அடுத்தடுத்த தோல்வி.. மோசமான நிலையில் ஆர்காம்..!

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான அனில் அம்பானி, மோடி பிரதமராகப் பதவியேற்றிய சில மாதங்களில் அதிரடியான பல அறிவிப்புகளை வெளியிட்டு அண்ணன் முகேஷ் அம்பானிக்கு கடும் போட்டியாளராக விளங்குவார் எனக் கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் அவர் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருகிறார்.

டெலிகாம் சேவை

டெலிகாம் சேவை

இதில் முக்கியமான அனில் தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்தின் டெலிகாம் சேவை நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் அடுத்தடுத்த பின்னடைவை சந்தித்து வருகிறார்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்

ஜியோ அறிமுகமான பின் அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தென் இந்தியாவில் கொடிக்கட்டி பறந்த ஏர்செல் நிறுவனத்தை முழுமையாக வாங்குவதாக அறிவித்தார். இதற்கான அனைத்துப் பணிகளும் செய்து வந்த நிலையில், கடைசிக்கட்டத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்குக் கடன் கொடுத்த வங்கிகள் இந்த இணைப்புக்கு ஒப்புதல் அளிக்கவில்லை,

இதன் மூலம் ஆர்காம் - ஏர்செல் மத்தியிலான இணைப்புத் துண்டிக்கப்பட்டது.

 

டவர் வர்த்தகம்

டவர் வர்த்தகம்

இதனையடுத்து ஆர்காம் நிறுவனத்தின் டவர் வர்த்தகத்தின் ஒரு பகுதியை, இந்தியாவில் வர்த்தகம் செய்து வரும் கனடா நாட்டின் ப்ரூக்பீல்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்யத் திட்டமிட்டது.

47,000 கோடி ரூபாய் கடன்

47,000 கோடி ரூபாய் கடன்

இந்த விற்பனையின் மொத்த மதிப்பு சுமார் 7,100 கோடி ரூபாய். ஏர்செல் உடனான இணைப்புதான் முடியவில்லை என்று டவர் வர்த்தகத்தை விற்றாவது ஆர்காம்-இன் 47,000 கோடி கடனை அடைக்கலாம் என முடிவிற்கு வந்தார் அனில் அம்பானி.

51 சதவீத விற்பனை

51 சதவீத விற்பனை

ஆர்காம் நிறுவனத்தின் டவர் வர்த்தகத்தின் 51 சதவீத பங்குகளை 7,100 கோடி ரூபாய்க்கு ப்ரூக்பீல்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் திட்டத்தை ஆர்காம் கடன் வாங்கிய எஸ்பிஐ தலைமையிலான வங்கி அமைப்பு முன்னிலையில் வைக்கப்பட்டது.

இதற்கான ஆய்வு வங்கி அமைப்புகள் செய்தது, விற்பனைக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

 

மறுப்பு...

மறுப்பு...

ஏர்செல் தோல்வியைத் தொடர்ந்து டவர் வர்த்தக விற்பனையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

வங்கி தரப்புக் கூறுகையில், ஆர்காம்-இன் டவர் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை விற்பதை விடவும் இந்நிறுவனத்தை முழுமையாக அதாவது டவர் மற்றும் பைபர் சொத்துக்களை விற்பனை செய்தால் சந்தையில் இதன் வியாபாரம் பெரிய அளவில் இருக்கும். இதனால் நிறுவனத்தின் கடன் தொகையையும் பெரிய அளவில் தீர்க்கப்படும் என வங்கி அமைப்பு தெரிவித்துள்ளது.

 

ஆர்வம்

ஆர்வம்

ஆர்காம் குறித்து வங்கி அமைப்புகளின் இந்த முடிவையடுத்து பார்தி இன்பராடெல், இன்டஸ், ஏடிசி, ப்ரூக்பீல்டு ஆகிய நிறுவனங்கள் முழுமையாக வாங்க விருப்பம் அளித்துள்ளது.

பிற முக்கிய நிறுவனங்கள்

பிற முக்கிய நிறுவனங்கள்

இவர்கள் மட்டுமல்லாமல் ரிலையன்ஸ் ஜியோ, ரஷ்யாவின் சிஷ்டமா, முதலீட்டு நிறுவனங்களான டிபிஜி கேபிட்டல், கேட்வே பார்ட்னர்ஸ், காலைல் குரூப் ஆகியவையும் விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்திய டெலிகாம் சந்தையில் தற்போது இருக்கும் போட்டியில் இத்தனை விருப்பங்கள் எதிர்பார்த்தது தான்.

 

டிராய்

டிராய்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் வருகிற டிச.1 முதல் தனது வாடிக்கையாளர்களுக்கு 2ஜி, 3ஜி சேவைகளை முழுமையாக நிறுத்தி விட்டு, 4ஜி டேட்டா சேவை மட்டுமே அளிக்கும் என அறிவித்துள்ளது.

8 வட்டங்கள்

8 வட்டங்கள்

இந்தியாவில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஆந்திர பிரதேசம், ஹரியான, மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம் கிழக்கு மற்றும் மேற்கு, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் சேவைகளை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜியோ உடன் கூட்டணி

ஜியோ உடன் கூட்டணி

இத்தகைய மோசமான நிலையில் நிறுவனத்தை விற்பதை விடவும் தனது அண்ணன் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ உடன் இணைந்து வர்த்தகம் செய்தால் கூடுதலான வருமானம் மற்றும் வர்த்தகம் கிடைக்கும். இதன் மூலம் ஆர்காம் மதிப்பு மட்டும் அல்லாது சில வருடங்களில் கடன் தொகையும் தீர்க்க முடியும்.

ஆனால் முடிவு அனில் அம்பானி கையில்.

 

குழப்பம்

குழப்பம்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+