ஆதார் இணைப்பினை அரசின் பல திட்டங்களுக்குக் கட்டாயம் என அறிவிப்பதை உச்ச நீதிமன்றம் எதிர்த்தாலும் அதனை மத்திய அரசு காதில் போட்டுக் கொள்கின்றதா என்பது தெரியவில்லை. இன்று உச்சநீதிமன்றம் இணைப்பு தேவையில்லை என்றால் நாளை அதுவே வேறு காரணங்களுக்காக இணைப்பினை செய்ய வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் இனி காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்யும் போதும் ஆதார் மற்றும் பான் இணைப்புக் கட்டாயம் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
ஐஆர்டிஏ
பொதுவாக எல்லா ஆயுள் காப்பீடு திட்டங்கள் மற்றும் மருத்துவக் காப்பீடு திட்டங்கள் போன்வரை வாங்கும் போது பான் எண் மாற்றும் ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் என்று ஐஆர்டிஏ தெரிவித்துள்ளது.
நிதி பரிவர்த்தனைகள்
பண மோசடி சட்டத்தின் கீழ் இந்தியாவில் அனைத்து நிதி சார்ந்த சேவைளைப் பெறவும் பான் எண் மற்றும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டு வருகின்றது.
உச்ச நீதிமன்றம்
ஒரு பக்கம் தனிப்பட்ட ஒரு நபரின் அடிப்படை உரிமையினைப் பாதிக்கக் கூடாது, ஆதார் இணைப்பினை செய்யவில்லை என்றால் வங்கி கணக்குச் சேவையினை நிறுத்தக் கூடாது, மொபைல் எண் சேவையினை நிறுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறுகின்றது.
அடையாள ஆவணம்
ஏற்கனவே இந்திய காப்பீட்டு நிறுவனங்கள் ஆதார் கார்டினை அடையாள ஆவணமாகப் பெற்று வருகின்றன. அதிலும் எண்டோவ்மெண்ட் திட்டங்கள் போன்றவை முதிர்வடைந்தால் ஆதார் சரிபார்ப்பிற்குப் பிறகே பணம் கிடைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
காப்பீடு நிறுவனங்கள்
இதனால் காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்யும் ஆர்வம் வாடிக்கையாளர்களிடம் குறையும் என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர். இதற்காக இந்தியாவில் காப்பீடு சேவை அளித்து வரும் நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளில் குறுகிய காலத்தில் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டி உள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications