எஸ்பிஐ வங்கி என்ஆர்ஐ-களுக்கு 4.25 சதவீதம் முதல் 6.25 சதவீதம் வரை பிகஸட் டெபாசிட் முதலீடு திட்டங்கள் மீது லாபத்தினை அளிக்கின்றது. இந்த வட்டி விகிதம் என்பது எவ்வளவு முதலீடு செய்கிறார்கள் மற்றும் எத்தனை ஆண்டுகள் வரை முதலீடு செய்கிறார்கள் என்பதைப் பொருத்து மாறும்.
இரண்டு வருடம் வரை
என்ஆர்ஐ ஒருவர் இரண்டு வருடங்கள் அல்லது அதற்கும் குறைவாகப் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் 6.25 சதவீத லாபம் கிடைக்கும். இதுவே 2 வருடங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதலீடு செய்தால் 6 சதவீதம் மட்டுமே கிடைக்கும்.
மேலே கூறிய வட்டி விகிதம் 1 கோடி ரூபாய்க்கும் குறைவாக முதலீடு செய்பவர்களுக்கு ஆகும். இதுவே 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்தால் வட்டி விகிதம் ஆண்டுக்கு 4.25 சதவீதம் மட்டுமே கிடைக்கும்.
இந்திய பிகசட் டெபாசிட்
இந்திய பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தினையும் அன்மையில் எஸ்பிஐ வங்கி குறைத்துள்ளது.
| முதலீடு காலம் | பொது மக்கள் 01.11.2017 (%) | மூத்த குடிமக்கள் 01.11.2017 (%) |
|---|---|---|
| 7 days to 45 days | 5.25 | 5.75 |
| 46 days to 179 days | 6.25 | 6.75 |
| 180 days to 210 days | 6.25 | 6.75 |
| 211 days to less than 1 year | 6.25 | 6.75 |
| 1 year | 6.25 | 6.75 |
| Above 1 year to 455 days | 6.25 | 6.75 |
| 456 days to less than 2 years | 6.25 | 6.75 |
| 2 years to less than 3 years | 6 | 6.5 |
| 3 years to less than 5 years | 6 | 6.5 |
| 5 years and up to 10 years | 6 | 6.5 |
வாகன கடன் மற்றும் வீட்டுக் கடன்
இதேப்போன்று வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன் மீதான வட்டி விகிதத்தினையும் 0.05 சதவீதம் வரை குறைத்துள்ளது. இதனால் வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதம் 8.35 சதவீதத்தில் இருந்து 8.30 சதவீதமாகவும், வாகன வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதம் 9.25 சதவீதத்தில் இருந்து 9.20 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது
எப்போது முதல் புதிய வட்டி விகிதம் அமலுக்கு வருகின்றது.
எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ள இந்தப் புதிய வட்டி விகிதங்கள் எல்லாம் நவம்பர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
என்ஆர்ஈ
வெளிநாடு வாழ் எக்ஸ்டர்னல் வங்கி கணக்கில் வெளிநாட்டு நாணயங்களாக மட்டுமே பிகஸட் டெபாசிட் கணக்குகளில் முதலீடு செய்ய முடியும். இந்தக் கணக்கின் மூலம் வரும் வட்டி விகித லாபத்திற்கு விலக்கு உண்டு.
அட்டவணை
என்ஆர்ஐ பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள். முதிர்வு காலத்திற்கு முன்பு ரத்து செய்தால் வட்டி விகிதம் ஏனும் கிடைக்காது.
| Tenors | Below Rs.1 Crore | Above Rs.1 Crore |
|---|---|---|
| 1 year | 6.25% | 4.25% |
| Above 1 year to 455 days | 6.25% | 4.25% |
| 456 days to less than 2 years | 6.25% | 4.25% |
| 2 years to less than 3 years | 6.00% | 4.25% |
| 3 years to less than 5 years | 6.00% | 4.25% |
| 5 years and upto 10 years | 6.00% | 4.25% |
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications