சர்வதேச சந்தைக்கு அதிகளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் சவுதி அரேபிய பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் மத்தியில் தனது கச்சா எண்ணெய் உற்பத்தி அளவை குறைக்க முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் எண்ணெய் சந்தையில் இருப்பு அளவு குறைந்து தேவையின் அளவு அதிகமாகும் காரணத்தால் பெட்ரோல், டீசல் தேவைக்கு, இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்கும் இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை பெரிய அளவில் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் இந்தத் திடீர் முடிவிற்கு என்ன காரணம்..?
உற்பத்தி அளவீடுகள்
நவம்பர் முதல் வருகிற டிசம்பர் வரையிலான காலத்திற்குச் சவதி அரசு தனது கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைந்து, ஏற்றுமதி அளவீடுகளை ஒரு நாளுக்கு 1,20,000 பேரல் அளவிற்குக் குறைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சவுதி அரசின் இந்தத் திடீர் அறிவிப்புக்கான காரணம் இதுதான்.
சிம்மாசன பிரச்சனை
தற்போது சவுதி அரேபியாவின் ராஜாவாக இருக்கும் சல்மான் இடத்தை அவரது மகன் முகமது பின் சன்மான் பிடிக்கப் பார்க்கிறார். இதுகுறித்த செய்திகள் கடந்த சில மாதங்களில் பல முறை வெளியானது. ஆனால் ஆட்சியில் மாற்றும் ஏதும் நடைபெறவில்லை.
பதவியைக் காப்பாற்றும் முயற்சி
இந்தப் பிரச்சனையைச் சமாளிக்கச் சவுதி அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு வருமானத்தைக் கூட்டி தனது பதவியைக் காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறார் அரசர் சல்மான்.
ஊழல்
மேலும் சவுதி இளவரசர் செய்த ஊழல்களை மறைக்கவே இந்த அறிவிப்புத் தற்போது வெளியிடப்பட்டுள்ளது என்ற கருத்தும் நிலவுகிறது.
வருமானத்தில் சரிவு
அமெரிக்காவின் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் வர்த்தகத்துடன் போட்டி போடும் வகையில், வளைகுடா நாடுகள் தனது உற்பத்தி அளவுகளை அதிகரித்துச் செயற்கையாகக் கச்சா எண்ணெய் விலையைக் குறைத்தது.
இதன் மூலம் அதிகளவிலான வருமானத்தை இழந்து நிற்கிறது வளைகுடா நாடுகள், இதில் அதிகம் பாதிக்கப்பட்டது சவுதி.
ஆராம்கோ
அதனுடன் உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமாக விளங்கும் சவுதி அரசின் ஆராம்கோ நிறுவனம் பங்குச்சந்தையில் இறங்க முடிவு செய்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் கச்சா எண்ணெய்யின் விலை சராசரி அளவிலான 60 டாலருக்கும் குறைவாக இருந்தால் முதலீட்டாளர்களுக்கு மட்டுமே லாபம், இதனால் ஆராம்கோ நிறுவனத்திற்கு எவ்விதமான லாபமும் இல்லை.
இதன் காரணமாகவே தற்போது உற்பத்தியைக் குறைத்து விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது சவுதி அரசு.
ரஷ்யா
அதேபோல் OPEC அமைப்பில் இருக்கும் நாடுகள் மற்றும் இதில் இல்லாத ரஷ்யா உட்பட நாடுகளும் இணைந்து ஜனவரி மாதம் முதல் கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளுக்கு 1.8 மில்லியன் பேரல் வரையில் குறைக்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா
சவதி தற்போது உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய்யில் 10 சதவீதத்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உற்பத்தி குறைப்பு மூலம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் அளவீடும் குறையும்.
2018இல் அமர்க்களம்..
இதன் மூலம் 2018ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகளவில் குறைந்து சர்வதேச சந்தையில் இதன் விலை 68 டாலர் முதல் 70 டாலர் வரையில் உயரும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications