இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் 30சதவீதத்திற்கும் குறைவான லாபத்தை பெற்று முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லாபம்
செப்டம்பர் காலாண்டில் எஸ்பிஐ வங்கி 2,759 கோடி ரூபாய் வரையிலான லாபத்தை அடையும் என அனைத்து தரப்பினராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த வருடத்தை விடவும் செப்டம்பர் காலாண்டில் 37 சதவீதம் குறைவான அளவீட்டை அடைந்துள்ளது.
இக்காலாண்டில் எஸ்பிஐ வங்கி வெறும் 1,581 கோடி ரூபாய் அளவிலான லாபம் மட்டுமே அடைந்துள்ளது.
மொத்த வருமானம்
இக்காலண்டில் எஸ்பிஐ வங்கியின் வருமானத்தின் அளவு 27.3 சதவீதம் வரையில் உயர்ந்து 18,586 கோடி ரூபாய் பெற்றுள்ளது. ஆனால் லாபத்தில் ஏற்ப்பட்ட சரிவு முதலீட்டாளர்களை கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.
வராக்கடன்
மேலும் வராக்கடன் அளவு செப்டம்பர் காலாண்டில் 9.97 சதவீதத்தில் இருந்து 9.83 சதவீதமாக குறைந்துள்ளது.
சந்தையில் இருக்கும் பிற நிறுவனங்களின் வராக்கடன் அளவீடுகள் அதிகரித்து வரும் நிலையில் எஸ்பிஐ வங்கியின் வராக்கடன் கணிசமான அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது.
எஸ்பிஐ வங்கி
வராக்கடன் அளவில் ஏற்ப்பட்ட கணிசமான சரிவு உள்ளாட்டு முதலீட்டாளர்களுக்கு இவ்வங்கி மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது, இதன் வாயிலாக எஸ்பிஐ வங்கி பங்குகள் காலாண்டு முடிவுகள் வெளியான பின்பு உயர்நவை சந்தித்துள்ளது.
இதன் படி 1.15 மணி அளவில் எஸ்பிஐ பங்கு விலை 3.28 சதவீதம் வரையில் உயர்ந்து 324.25 ரூபாயாக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications