மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. இனி எல்லோருக்கும் சொந்த வீடு..! #7thPayCommission

7வது சம்பள கமிஷன் அமலாக்கப்பட்டு ஒரு வருடம் ஆனா நிலையில் இதன் பிரிந்துரைகள் ஒவ்வொன்றாகக் கணக்கில் எடுக்கப்பட்டு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமலாக்கம் செய்து வருகிறது.

இதன் படி ரயில்வே துறை, வங்கி துறை என அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் சொந்தமாக வீடு வாங்கவோ அல்லது கட்டவோ குறைவான வட்டியில் அளிக்கப்படும் கடன் அளவை மத்திய அரசு 3 மடங்காக அதிகரித்துள்ளது.

7வது சம்பள கமிஷன்

7வது சம்பள கமிஷன்

மத்திய அரசு அளித்த ஒப்புதலின் படி இனி மத்திய அரசு ஊழியர்கள் வீட்டு கட்டும் திட்டத்தின் (HBA) கீழ் 8.50 சதவீதத்தின் கீழ் 25 லட்சம் ரூபாய் வரையில் கடன் பெற அனுமதி அளித்துள்ளது.

 வீட்டு மனை துறை

வீட்டு மனை துறை

இதன் மூலம் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, RERA ஆகியவற்றின் அமலாக்கம் மூலம் துவண்டு போன வீட்டுமனை விற்பனை துறையை மீட்டு எடுக்க முடியும் என மத்திய அரசு நம்புகிறது.

7.50 லட்சம் மட்டுமே.

7.50 லட்சம் மட்டுமே.

இதற்கு முன் HBR திட்டத்தின் கீழ் 7.50 லட்சம் ரூபாய் வரையிலான கடனை 6 முதல் 9.50 சதவீத வட்டியில் மட்டுமே பெற முடியும்.

தற்போது அறிவித்துள்ள திட்டத்தின் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் சுமார் 11 லட்சம் ரூபாய் வரையில் சேமிக்க முடியும் வீட்டுமனை மற்றும் நகர விவகார துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

20 வருடக் கடன்

20 வருடக் கடன்

25 லட்ச ரூபாயை 20 வருடத்திற்குத் தற்போது சந்தையில் இருக்கும் 8.35 சதவீத வட்டியில் கடன் பெற்றால் மாதம் தவணை 21,459 ரூபாயாக இருக்கும். இதன் மூலம் 20 வருடம் முடிந்த பின்பு மொத்தமாகச் செலுத்தப்படும் தொகை 51.50 லட்சம் ரூபாய் ஆக இதில் வட்டி மட்டும் 26.50 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

HBR திட்டம்

HBR திட்டம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் HBR கடன் திட்டத்தில் எளிமையான வரி மட்டுமே.

எளிய வட்டி முறையில் 20 வருடத்திற்கு 25 லட்சம் கடனை 8.50 சதவீத வட்டியில் கடன் பெற்றால் முதல் 15 வருடத்திற்குத் தவணை அளவு 13,890 ரூபாய் மட்டுமே, மீதமுள்ள காலத்திற்கு 26,411 ரூபாய்.

ஆக 20 வருடத்தில் நீங்கள் செலுத்தும் மொத்த தொகையில் அளவு வெறும் 40.84 லட்சம் ரூபாய் மட்டுமே. இதில் 15.84 லட்சம் ரூபாய் வட்டி தொகை.

 

1 கோடி ரூபாய்

1 கோடி ரூபாய்

மேலும் மத்திய அரசு ஊழியர்கள் வாங்கும் வீட்டின் மதிப்பின் அதிகப்படியான விலை அளவை 30 லட்சம் ரூபாயில் இருந்து தற்போது 1 கோடி ரூபாய் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.

 ஜாக்பாட்

ஜாக்பாட்

இதை மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் என்று சொல்லாமல் எப்படிச் சொல்வது. அனைவரும் இந்தச் சூப்பரான வாய்ப்பை பயன்படுத்திச் சொத்து வீடுக்குக் குடியேறுங்கள்.

HBR கடன் திட்டம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் கிடைக்கிறது.

 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+