குஜராத் முதல்வருக்கு ரூ.15 லட்சம் அபராதம்.. என்ன செய்தார் தெரியுமா..?

பிரதமர் மோடியின் சொந்த ஊரான குஜராத் மாநிலத்தின் முதல்வரான விஜய் ரூபானி பங்குச்சந்தையில் முறைகேடான வர்த்தகம் செய்து ஒரு நிறுவனத்தின் பங்கு மதிப்பைச் செயற்கையாக உயர்த்து அதிகளவிலான லாபத்தைப் பெற்றுள்ளார்.

இது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 செபி அமைப்பு

செபி அமைப்பு

பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி வெளியிட்டுள்ள அறிக்கையில் குஜராத் முதல்வர் விஜய் ருபானி-யின் இந்து இணைப்புக் குடும்பம் (HUF) உட்பட 22 பேர் சாரங் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்தில் முறைகேடான வர்த்தகத்தைச் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முறைகேடான வர்த்தகம்

முறைகேடான வர்த்தகம்

சாரங் கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் செய்த இந்த முறைகேடான வர்த்தகம் விஜய் ரூபானி மற்றும் 22 பேர் 2011ஆம் ஆண்டின் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் செய்யப்பட்டுள்ளது எனச் செபி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

லாபம்

லாபம்

விஜய் ருபானி மற்றும் 17 பேர் இந்நிறுவனத்தில் செய்யப்பட்ட முறைகேடான வர்த்தகத்தின் மூலம் சட்டத்திற்குப் புறம்பான வகையில் லாபம் அடைந்துள்ளனர். இது தண்டனைக்குறியது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

 அபராதம் மற்றும் காலக்கெடு

அபராதம் மற்றும் காலக்கெடு

இதற்காக ரூபானி மற்றும் இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் 15 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனச் செபி உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்தத் தொகையை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பதில்

பதில்

செபியின் குற்றச்சாட்டு மற்றும் அபராதம் குறித்து எவ்விதமான மறுப்பு குஜராத் முதல்வர் விஜய் ருபானி தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ருபானி முறைகேடான வர்த்தகம் செய்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

குஜராத்

குஜராத்

பங்குச்சந்தையில் அதிகம் முதலீடு செய்யும் மாநிலங்களில் குஜராத் மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. வர்த்தகச் சந்தையில் அதிகம் முதலீடு செய்வோரும் இம்மாநிலத்தவர்கள் முன்னிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 மோடியின் சொத்து

மோடியின் சொத்து

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+