கத்துக்கிட மொத்த வித்தையும் இறக்கிய சிம்பு! #DemonetizationAnthem

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீப காலமாக மக்களின் பிரச்சனைக்குப் பிரபலங்களில் பல விதங்களில் குரல் கொடுத்து வருகின்றனர். இதில் தமிழ்நாட்டுப் பிரபலங்கள் ஒரு படி மேல் என்று தான் சொல்ல வேண்டும்.

 

நடிகர் ஜோசப் விஜய்-யின் மெர்சல் திரைப்படத்தில் மருத்துவம், ஜிஎஸ்டி வரி என மத்திய அரசின் நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டிப்பட்ட நிலையில், 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு தடையின் எதிரொலி மற்றும் மக்கள்பட்ட துன்பங்களைப் புட்டுபுட்டு வைக்கும் அளவிற்கும், இதற்கான காரணமானவர்களுக்கு நேரடியாகச் சுட்டிக்காட்டும் அளவிற்கு நடிகர் சிம்பு பாட்டிய #DemonetizationAnthem தற்போது இணையத்திலும் மட்டும் அல்லாமல் அரசு வட்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிம்பு பாடிய இப்பாடலில் குறிப்பிட்ட முக்கியமான விஷயங்கள் என்ன தெரியுமா..?

 மக்கள் துயரம்..

மக்கள் துயரம்..

பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பின் மக்கள் தங்களது தினசரி செலவிற்குக் கூடப் பணமில்லாமல் குறிப்பாக மருத்துவம், உணவு பொருட்களுக்கான செலவுகளுக்குக் கூடப் பணமில்லாமல் தவித்ததையும். முதியவர் வங்கியில் பணம் மாற்றுவதற்காக நின்று கொண்டு இருக்கையில் இறந்ததை நினைவுபடுத்தும் வரையில் வாழ்க்கை ஏடிஎம்மில் அஸ்கு புஸ்கு ஆயாச்சு எனக் குறிப்பிட்டுள்ளார்.

 மூதேவிங்க

மூதேவிங்க

விசாயிகள், நடுத்தர மக்கள் வியாபாரத்திற்காகவும், கல்விக்காவும் வங்கியில் கடன் கேட்டால் இல்லையெனக் கூறிவிட்டு பெரியபெரிய தொழிலதிபர்களுக்குக் கொடுத்த பணம் இப்போது காணாமபோச்சு என்று விஜய் மல்லையாவையும் வங்கிகளின் நடவடிக்கையும் சுட்டிக்காட்டினார்.

கருப்புப் பணம்
 

கருப்புப் பணம்

சாமானியர்கள் உழைத்துச் சம்பாதித்த சில 500, 1000 ரூபாய் செல்லமலேயே போயாச்சு, மக்களுக்குக் கிடைக்காத புதிய ரூபாய் நோட்டுகள் கருப்பு பண முதலைகளிடம் கட்டுகட்டாகப் புதிய ரூபாய் நோட்டுகளிடும் வெள்ளையாக மாறியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஜினி, கமல்..

ரஜினி, கமல்..

நாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை முழுமையாக ஒழிக்க முடியும் என நம்பிக்கை கூறி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் சொல்லாது அறிவிக்கப்பட்ட போது சாமானியர்கள் முதல் அனைத்து தரப்பினரும் பாராட்டியது மட்டும் அல்லாமல் நம்பிக்கையும் வைத்தார் என் ரஜினி மற்றும் கமல் ஆகியோர் செய்த டிவிட்டை வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி..

ஜிஎஸ்டி..

பணமதிப்பிழப்பால் எல்லாப் பிரச்சனையும் முடிந்தது என் நினைக்கும் போது மொத்த வர்த்தகச் சந்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் சீர்குலைத்த சரியான திட்டமிடாமல் ஒவ்வொரு கூட்டத்திலும் மாற்றங்களை அறிவித்து வரும் ஜிஎஸ்டி வந்தாச்சுன்னு பாடியுள்ளார் சிம்பு.

பணமில்லா பொருளாதாரம்

பணமில்லா பொருளாதாரம்

பணமதிப்பிழப்பு மூலம் ஏற்பட்ட தோல்வியை மறைக்கப் பணமில்லா பொருளாதாரம், டிஜிட்டல் பணபரிமாற்றம் என ஏதேதோ மத்திய அரசு வசமனம் பேசியதை கார்ட ஸ்வைப் பண்ணி நாம் வாழலாம் என இப்பாடலின் எழுத்தாளர் கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

இந்நிலையில் சிம்பு பாடிய தட்றோம் தூக்றோம் பாடலுக்குப் பாஜகவினர் அவர் மீது கடுமையான கோபத்தில் இருப்பதால் சென்னை திநகரில் இருக்கும் சிம்புவின் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குஜராத் முதல்வர்

குஜராத் முதல்வர்

சமீபத்தில் பங்குச்சந்தையில் முறைகேடாக வர்த்தகம் செய்து அதிகளவிலான லாபத்தை அடைந்துள்ளது குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி மீது செபி குற்றச்சாட்டு கூறியுள்ளது. இதுகுறித்து எந்தொரு பாஜகவினரும் கருத்து கூறவில்லை.

ரூ.15 லட்சம் அபராதம்

ரூ.15 லட்சம் அபராதம்

<strong>குஜராத் முதல்வருக்கு ரூ.15 லட்சம் அபராதம்.. என்ன செய்தார் தெரியுமா..?</strong>குஜராத் முதல்வருக்கு ரூ.15 லட்சம் அபராதம்.. என்ன செய்தார் தெரியுமா..?

 வசனங்கள்

வசனங்கள்

<strong>காணாமல்போன அதிரடி வசனங்கள்.. இப்போ என்ன செல்லப்போகிறார் மோடி?</strong>காணாமல்போன அதிரடி வசனங்கள்.. இப்போ என்ன செல்லப்போகிறார் மோடி?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

what simbu said in Thatrom Thookrom #DemonetizationAnthem

what simbu said in Thatrom Thookrom #DemonetizationAnthem
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X