மலேஷிய பட்ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏரேசியா இன்று உள்நாட்டு விமானப் பயண டிக்கெட்களின் அடிப்படை கட்டணத்தினை 99 ரூபாய் எனவும், வெளிநாட்டு விமானப் பயண அடிப்படை கட்டணங்களை 444 ரூபாய் முதலும் பெறலாம் என்று அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஏர் ஏசியா நிறுவனம் டாடா குழுமத்துடன் இணைந்து விமானப் போக்குவரத்துச் சேவையினை அளித்துவறுகிறது.
சலுகை காலம்
ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் ஏர் ஏசியாவின் இந்தச் சலுகை விலையில் டிகெட்களை நவம்பர் 19 வரை புக் செய்யலாம். 2018 மே முதல் 2019 ஜனவரி வரை பயணம் செய்யும் டிக்கெட்கள் மட்டும் இந்தச் சலுகை விலையில் கிடைக்கும்.
உள்நாட்டு வழித்தடங்களில் உள்ள சலுகைகள்
பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத், ராஞ்சி, புவனேஷவர், கொல்கத்தா, டெல்லி, கோவா மற்றும் பிற ஏர் ஏசியா சேவை உள்ள பிற வழித்தடங்களிலும் சலுகை விலையில் பயணம் செய்யலாம்.
வெளிநாட்டு வழித்தடங்கள்
கோலாலம்பூர் செல்ல திருச்சி, கொச்சி, டெல்லி, புவனேஷ்வர், ஜெய்ப்பூர் பயணம் செய்யவும், பாலி செல்ல மும்பை கொல்கத்தாவிலிருந்தும், பாங்காக் செல்ல ஜெப்பூர், கொல்கத்தா, கொச்சி, சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்தும் விமான டிக்கெட்கள் சலுகை விலையில் கிடைக்கும்.
1,000 ரூபாய் சலுகை
ஏர் ஏசியா நிறுவனம் மோபிகிவிக் நிறுவனத்துடன் இணைந்து விமானப் பயணங்களுக்கு டிக்கெட் 1,000 ரூபாய் சலுகை விலையில் கிடைக்கும். ஏர் ஏசியாவில் பயணம் செய்பவர்களுக்கு ட்ரீபோ ஹொட்டலில் 25 சதவீத சலுகை கிடைக்கும்.
ரகுராம் ராஜன்
சமானியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!
ரூ.15 லட்சம் அபராதம்.
சிம்பு! #DemonetizationAnthem


Click it and Unblock the Notifications