நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியான அமிதாப் காந்த் சனிக்கிழமை டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மட்டும் இல்லாமல் தேவைக்கதிகமான ஏடிஎம் மையங்களை மூட அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த இடைப்பட்ட காலத்தில் மொபைல் போன் மூலம் செய்யப்படும் நிதி பரிவர்த்தனைகள் அதிகரிக்கும் என்று கூறினார். இந்தியாவின் மக்கள் தொகையில் 72 சதவீதத்தினர் 32 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இது மிகப் பெரிய சாதகமான அம்சமாகும்.
டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள்
இந்தியாவில் கிரெட்ட், டெபிட் கார்டுகள் மற்றும் ஏடிஎம் தொழில்நுட்பங்கள் 3 முதல் 4 வருடத்திற்குள் குறைந்து மொபைல் போன் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று நிதி ஆயோக் துறையின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பையோமெட்ரிக் தகவல்கள்
உலகிலேயே இந்தியாவில் தான் ஆதார் கார்டு மூலமாக அதிகப்படியான பையோமெட்ரிக் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதுமட்டும் இல்லாமல் மொபைல் போன் பயனர்கள் மற்றும் வங்கி கணக்கு பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் நாடு முழுவதும் பணப் பரிவர்த்தனை செய்வதற்கான செய்வதற்கான முக்கியத் தொழில்னுட்பமாக ஆதார் சார்ந்த பரிவர்த்தனைகள் இருக்கும்.
மொபைல் போன்
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு மொபைல் போன் மூலம் செய்யப்படும் பணப் பரிவர்த்தனையின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. வரலாற்றில் எப்போதாவது ஏற்படும் மிகப்பரிய மாற்றங்கள் இந்தியாவில் நிகழ்ந்து வருகின்றது.
வளர்ச்சி
இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 7.5 சதவீத வளர்ச்சியினைப் பெற்று வருகின்றது. பறந்து விரிந்து கிடக்கும் இந்தியாவின் பரப்பளிவினால் அடுத்தச் சில ஆண்டுகளில் 9 முதல் 10 சதவீதமாகப் பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்றும் அமிதாப் காந்த் கூறியுள்ளார்.
புதுமையினை நோக்கி பயணம்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் இந்தியாவில் இளைஞர்கள் எண்ணிக்கை 72 சதவீதமாக உள்ளது. அதுமட்டும் இல்லாமல் 2040-க்குள் இது மேலும் அதிகரிக்க உள்ளது, எனவே நமது சமுகமும் புதுமையினை நோக்கிச் செல்ல வேண்டும் என்று அமிதாப் காந்த் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications