மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் சலுகைகளை மாற்றிமைக்கும் 7வது சம்பள கமிஷன் அறிக்கையில் புதிய சம்பளம் 2018ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதமும் முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரியவந்துள்ளது.
2018, ஜனவரி மாதமே 7வது சம்பள கமிஷனின் புதிய சம்பளம் கிடைக்கும் என எதிர்பார்த்த மத்திய அரசு ஊழியர்களுக்கு, இந்தக் காலதாமதம் வருத்தமான செய்தியாக அமைந்துள்ளது.
அறிவிப்பு
7வது சம்பள கமிஷனின் புதிய சம்பளம் குறித்த முடிவுகள் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் தேசிய ஒழுங்குமுறை குழுவிடம் பரிந்துரை செய்யப்படும், அதன் பின் ஆய்வு செய்யப்பட்டு நாடாளுமன்த்தில் ஒப்புதல் பெற்று அனைத்து துறைகளிலும் இதனை நடைமுறைப்படுத்தப்பட்டு ஏப்ரல் மாதம் அமலாக்கம் செய்யப்படும் எனச் சென் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
போராட்டம்
7வது சம்பள கமிஷனின் புதிய சம்பளத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு தாமதம் செய்வதை ஏதிர்த்து 10 மத்திய ஊழியர்கள் யூனியன் அமைப்புகள் நாடாளுமன்றத்தின் முன்பு போராட்டம் நடத்துகின்றனர்.
குறைந்தபட்ச சம்பளம்
மத்திய அரசு ஊழியர்கள் குறைந்தபட்ச சம்பளமாக 26,000 கோடி அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் 7வது சம்பள கமிஷனில் 18,000 ரூபாய் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச சம்பளமாக 26,000 ரூபாய் நடைமுறைக்கு வந்தால், தனியார் நிறுவனங்களும் அடிப்படை சம்பளத்தை உயர்த்தியாக வேண்டும்.
உயர்வு
7வது சம்பள கமிஷன் அறிக்கையில் தற்போது நாட்டின் பொருளாதாரம் மற்றும் பணவீக்கம் அடிப்படையில், நடைமுறையில் இருக்கும் குறைந்தபட்ச சம்பளமான 7,000 ரூபாயை 18,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது. இதேபோல் அதிகப்படியான 80,000 ரூபாய் சம்பள அளவை 2.5 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை 7வது சம்பள கமிஷன் அறிக்கையில் 2.57 மடங்கு அதிகரித்துள்ளது.
போராட்டத்தின் பின்..
மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்திற்குப் பின் குறைந்தபட்ச சம்பள அளவை தற்போது அறிவிக்கப்பட்ட 18,000 ரூபாயில் இருந்து 21,000 ரூபாயாக அரசு உயர்த்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications