சீனாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா உலகில் எந்த ஒரு ஈகாமர்ஸ் நிறுவனமும் அடைந்திடாத வகையில் ஒரே நாளில் 25 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஓரே நாளில் விற்பனை செய்து அசத்தியுள்ளது.
இது இந்தியாவின் பிளிப்கார்ட், ஸ்னாப்டீல், அமேசான் இந்தியா, போன்ற நிறுவனங்களால் எட்டமுடியாத நிலை என்பது குறிப்பிடத்தக்கது.
அலிபாபா
அதிகளவிலான தள்ளுபடி மூலம் வாடிக்கையாளர் ஈர்க்கும் அலிபாபா, உலக நாடுகள் முழுவதும் ஆர்டர் செய்யும் பொருட்கள் விநியோக செய்யும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
25.3 பில்லியன் டாலர்
இந்நிலையில் தனது Taobao மற்றும் டிமால் தளத்தில் 163.8 பில்லியன் யூவான் அல்லது 25.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களில் ஓரே நாளில் விற்பனை செய்து உலக ஈகாரமஸ் நிறுவனங்களுக்குப் புதிய இலக்கை கொடுத்துள்ளது.
24 மணிநேரத்தில் சுமார் 148 கோடி பரிமாற்றங்களைப் பெற்று சுமார் 25.3 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தை அடைந்துள்ளது.
39 சதவீத வளர்ச்சி
அலிபாபா தனது முந்தைய ஒரு நாள் விற்பனை சாதனை அளவான 17.79 பில்லியன் டாலரை கடந்த வருடம் அடைந்த நிலையில், 2017ஆம் ஆண்டில் 39 சதவீத வளர்ச்சியுடன் ஒரே நாளில் பில்லியன் டாலருக்குப் பொருட்களை விற்பனை செய்து தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.
வருவாய்
இதன் மூலம் செப்டம்பர் காலாண்டில் அலிபாபா நிறுவனத்தின் வருவாய் அளவுகள் சுமார் 61 சதவீதம் அளவிற்கு உயர்ந்து முதலீட்டாளர்களைக் குஷிப்படுத்தியுள்ளது.
அமெரிக்க நிறுவனங்கள்
அமெரிக்காவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்கள் பிளாக் பிரைடே தினத்தில் 3 பில்லியன் டாலரும், சைபர் மண்டேவில் 3.45 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தை மட்டுமே அடைந்த நிலையில், அலிபாபாவின் இந்தச் சாதனை உலக ஈகாமர்ஸ் சந்தையில் அமெரிக்க நிறுவனங்களை மொத்தமாக ஓரம்கட்டியுள்ளது.
ஒருநாள் விற்பனை அளவில் அலிபாபா 20136 முதல் 2015 ஆண்டுகளில் 60 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications