ரிலையன்ஸ் ஜியோவின் போட்டி நிறுவனங்கள் 399 ரூபாய்க்கும் அதிகமான ரீசார்ஜ் செய்யும் போது வழங்கி வரும் கேஷ் பேக் ஆஃபர் குறித்து டிராயிடம் கேள்வி கேட்டு வருகின்றன.
இந்திய செல்லுலார் ஆப்ரேட்டர்கள் சங்கமும் தொலைத்தொடர்பு துறை ஒழுங்குமுறை ஆணையமான டிராயிடம் ஜியோ தற்போது வழங்கி வரும் கேஷ்பேக் ஆஃபர் தொலைத்தொடர்பு துறை விதிமுறைகளுக்குப் புறம்பானது என்றும் இதைப்பற்றிக் கேள்வி கேட்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளது.
இந்திய செல்லுலார் ஆப்ரேட்டர்கள் சங்கம்
இந்திய செல்லுலார் ஆப்ரேட்டர்கள் சங்கத்தின் கீழ் பார்தி ஏர்டெல், வோடாபோன் இந்தியா, ஐடியா செல்லுலார் மற்றும் ஜியோவும் உள்ளது. ஆனால் இந்தக் குழுவில் அதிகமாக ஏர்டெல், வோடாபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளதால் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்திற்குத் தலைவலியாக உள்ளது.
கேள்வி
கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படுவது எதன் அடிப்படியில் வழங்கப்படுகின்றது, சேவையினை இலவசமாக அளிப்பதற்கு இது ஒரு மாற்று வழியா எனவும் இந்திய செல்லுலார் ஆப்ரேட்டர்கள் சங்கம் கேள்வி கேட்டுள்ளது.
பணம் சம்மந்தப்பட்டது என்பதால் இலவச கூப்பன், கேஷ்பேக் ஆஃபர், போன் விற்பனை போன்றவற்றில் என்ன விதிகள் பின்பற்றப்படுகின்றன என்பதில் தொலைத்தொடர்பு ஆணையம் தலையிட்டு முடிவு எடுக்க வேண்டும் என்றும் இந்திய செல்லுலார் ஆப்ரேட்டர்கள் சங்கம் கூறியுள்ளது.
ஜியோ
சென்ற ஆண்டுச் செப்டம்பர் மாதம் துவங்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் 138.6 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அதே நேரம் 270.59 கோடி ரூபாய் நட்டத்துடன் 6,147கோடி ரூபாய் வருவாயினைச் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் பெற்றுள்ளது.
டிராய்
தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவரான ஆர் எஸ் ஷர்மா டாரிப் திட்டங்களைத் தொடர்ந்து டிராய் ஆராய்ந்து விதிகளை வகுத்து வருவது போன்று ஆஃபர்கள் குறித்தும் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஜியோ ஆஃபர்
சென்ற வாரம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிரைம் சேவையினைப் பயன்படுத்தும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 399 ரூபாய்க்கும் அதிகமான ரீசார்ஜ் செய்யும்போது 2,599 ரூபாய் வரை கேஷ்பேக் ஆஃபர் அறிவித்ததுள்ளது.
ஜியோ கேஷ்பேக் ஆஃபர் அளிக்கும் செயலிகள்
ஜியோ நிறுவனம் 399 ரூபாய்க்கு அதிகமாக ரீசார்ஜ் செய்யும் போது 100 சதவீத கேஷ்பேக் ஆஃபர் உடனடி கேஷ்பேக் ஆஃபராக 300 எனப் பல சலுகைகளை அமேசான் பே, ஆக்சிஸ் பே, ப்ரீசார்ஜ், மோபிகிவிக், பேடிஎம் மற்றும் போன்பே உள்ளிட்ட செயலிகளிலும் பெற முடியும்.
ஏர்டெல்
பார்தி ஏர்டெல் நிறுவனமும் இதேப்போன்று 100 சதவீத கேஷ் பாக் ஆஃபரை தீபாவளியின் போது அளித்தது. ஜியோ ஆஃபர் வந்த உடன் அந்த ஆஃபரை அப்படியே தொடர்ந்து அளித்து வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications