டெலிகாம் நிறுவனமான ஐடியா செல்லுலார் தொடர்ந்து 4 காலாண்டாகத் திங்கட்கிழமை நட்டம் அடைந்துள்ளதாக இரண்டாம் காலாண்டு அறிக்கையினைப் பதிவு செய்துள்ளது.
ஐடியா செல்லுலார் நிறுவனம் நடப்பு ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 1,106.8 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஜூலை முதல் செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 91.5 கோடி ரூபாய் நிகர லாபத்தினை ஐடியா நிறுவனம் பெற்றுள்ளது.
வருவாய்
ஐடியா நிறுவனத்தின் முக்கிய நடவடிக்கைகளின் வருவாய் 19.72 சதவீதம் சரிந்து 7,465.5 கோடி ரூபாயாக இரண்டாம் காலாண்டில் சரிந்துள்ளது. இதுவே சென்ற நிதி ஆண்டில் 9,300.23 கோடியாக இருந்தது.
எதிர்பார்த்ததை விட அதிக நட்டம்
வல்லுனர்கள் நடப்புக் காலாண்டில் ஐடியா செல்லுலார் நிறுவனம் 1,125 கோடி நட்டம் அடையும் என்று எதிர்பார்த்த நிலையில் 1834.73கோடி நட்டம் அடைந்துள்ளது.
வோடபோன் இணைவால் சரிந்த வருவாய்
வோடாபோன் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதால் ஐடியா நிறுவனத்தின் வருவாய் 20 சதவீதம் சரிந்து 7,466 கோடியாக உள்ளது.
பங்கு சந்தை
இன்றைய பங்கு சந்தையில் காலை 11:20 மணி நிலவரத்தின் படி ஐடியா செல்லுலார் நிறுவனப் பங்குகள் 2.99 சதவீதம் சரிந்து 94.15 ரூபாயாகப் பங்கு சந்தையில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications