இந்திய டெலிகாம் சந்தை தற்போது புதிய மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. இதேபோல டெலிகாம் சேவையை அளிக்கத் தேவைப்படும் டவர் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மத்தியிலும் தற்போது மாற்றங்கள் நடந்து வருகிறது.
இதன் மாற்றத்தின் முதல் அடியே யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக இருப்பது டெலிகாம் சந்தையை அதிரவைத்துள்ளது.
இணைப்பு
ஜியோ வந்த பின் டெலிகாம் சந்தையில் புதிய ஆதிக்கத்தைச் செலுத்தும் வகையில் பிர்லா குழுமத்தின் ஐடியா-உம், பிரிட்டன் நாட்டின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனத்தின் இந்திய கிளை வோடபோன் இந்தியாவும் இணையத் திட்டமிட்டது.
இந்த இணைப்பின் மூலம் வாடிக்கையாளர் மற்றும் வர்த்தகத்தில் இக்கூட்டணியே நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான உருவெடுக்கும்.
விற்பனை
இந்திய டெலிகாம் வர்த்தகத்தில் 2வது மற்றும் 3வது இடத்தில் இருக்கும் ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனத்தின் டவர் வர்த்தகத்தை முழுமையாக ஏசிடி நிறுவனத்திற்குச் சுமார் 7,850 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது அமெரிக்க டாலர் மதிப்பில் 1.2 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியான முடிவுகள்
ஏடிசி மற்றும் ஐடியா-வோடபோன் இணைடயிலான இந்த முடிவு உறுதியான நிலையில் ஐடியா-வோடபோன் இணைப்பு கடைசிக்கட்ட ஒப்புதலுக்காகக் காத்துகிடக்கிறது. இந்நிறுவனங்களின் இணைப்பு 2018ஆம் ஆண்டுக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணப் பட்டுவாடா
ஐடியா-வோடபோன் நிறுவனங்களின் டவர் வர்த்தகத்தை ஏடிசி நிறுவனத்திற்கு விற்பனை செய்வதன் மூலம் ஐடியா 3,850 கோடி ரூபாயும், வோடபோன் 4,000 கோடி ரூபாயும் பெறும்.
இந்த டவர் வர்த்தகத்தில் விற்பனை 2018ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
20,000 டவர்கள்
இந்தியா முழுவதும் ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் சுமார் 20,000 டவர்களை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கன் டவர் கார்ப்ரேஷன் என்பதன் சுருக்கமே ஏடிசி.
எதற்காக இந்த விற்பனை
பொதுவாக டவர் வர்த்தகம் என்பது சற்று கூடுதலான முதலீடும், செலவுகளும் கொண்டு ஒரு பிரிவு. தற்போது இந்திய டெலிகாம் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தில் கட்டணத்தைக் குறைப்பதன் மூலம் அதிக நஷ்டத்தை அடைந்து வரும் டெலிகாம் நிறுவனங்கள் தங்களது செலவுகளைக் குறைப்பதன் மூலம் லாபத்தை உயர்த்தும் முயற்சியாக டவர் வர்த்தகத்தை விற்பனை செய்து வருகிறது.
இதன் முதல் படி ஐடியா - வோடாபோன், இனி வரும் காலத்தில் தொடர்ந்து பல முன்னணி டெலிகாம் சேவை நிறுவனங்கள் வைத்திருக்கும் டவர்களையும் விற்பனை செய்யும்.
இது மட்டுமா, இன்னும் பல மாற்றங்கள் நடக்கப்போகிறது. அடுத்துவரும் இணைப்பை கிளிக் செய்யுங்கள்.
குழப்பத்தில் டெலிகாம் துறை
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications