மத்திய அரசு குறிவைக்கும் 5 முக்கியத் துறைகள்.. புதிய திட்டத்துடன் மோடி..!

இந்தியாவில் அதிகளவிலான வேலைவாய்ப்பை உருவாக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தைக் கொண்டு வந்தது.

இத்திட்டங்கள் மூலம் பெரிய அளவிலான நன்மைகள் கிடைக்காமல் உள்ளது, காரணம் மேக் இன் இந்தியா மூலம் செயல்படுத்தும் அனைத்துத் திட்டங்களும் நீண்ட கால அடிப்படையிலானது.

இந்நிலையில் இத்திட்டத்தை முழுமையாக ஆய்வு செய்து புதிய மாற்றங்களைக் கொண்டு வரப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 5 துறைகள் மட்டும்

5 துறைகள் மட்டும்

இந்தியாவில் தற்போது இருக்கும் வர்த்தகம் மற்றும் பொருளாதாரச் சூழ்நிலையில், 25 துறைகளை மொத்தமாகக் கவனிப்பில் வைப்பதை விட 5 துறைகளை மட்டும் முதன்மையாகக் கொண்டு முழுமையான கவனத்தைச் செலுத்துவதன் மூலம் பெரிய அளவிலான வளர்ச்சியைக் காட்ட முடியும் என மத்திய அரசு நம்புகிறது.

எந்தத் துறைகள் அது..?

எந்தத் துறைகள் அது..?

இந்தியாவில் தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது வேலைவாய்ப்பு. இந்நிலையில் ஆட்கள் அதிகம் தேவைப்படும் முக்கியமான துறைகளை மட்டும் கவனித்தில் வைத்துத் தோல், டெக்ஸ்டைல் மற்றும் கார்மென்ட்ஸ், பார்மா, ஆட்டோமொபைல் மற்றும் இன்ஜினியரிங் ஆகிய 5 துறைகளை மட்டும் தற்போது கவனத்தில் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நித்தி அயோக்

நித்தி அயோக்

இதன் முதற்கட்டமாக ஆட்டோமொபைல் சந்தையில் சட்டதிட்டங்களை மாற்றி எளிமைப்படுத்த நித்தி அயோக் அமைப்பு இத்துறையின் முக்கியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இக்கூட்டத்தில் ஆட்டோமொபைல் துறையில் அதிகப்படியான வேலைவாய்ப்பை உருவாக்குவது எப்படி என்பதை மைய கருத்தாகக் கொண்டு இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

 

உற்பத்தி

உற்பத்தி

மேலும் ஆட்டோமொபைல் துறையில் இருக்கும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உதிரி பாகங்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து அதனை இணைத்து விற்பனை செய்து வருகிறது.

இவர்களை இந்தியாவிலேயே உற்பத்தி ஆலையை அமைக்க வேண்டுகோள் விடுத்துள்ளது மத்திய அரசு.

 

 முதலீடு

முதலீடு

மத்திய அரசு முடிவுசெய்துள்ள 5 துறைகளில் முதன்மையாக ஆட்டோமொபைல் துறையைக் கையில் எடுத்துள்ளது.

இதன் படி ஆட்டோமொபைல் துறை முதல் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் வரையில் புதிய ஐடியாக்கள் இந்திய அரசின் முதலீட்டு அமைப்பான இன்வெஸ்ட் இந்தியா அறிவித்துள்ளது.

 

சீனா

சீனா

1999ஆம் ஆண்டு அமெரிக்காவை விடவும் மிகவும் குறைவான எண்ணிக்கையில் கார்களை உற்பத்தி செய்து வந்த சீனா தற்போது அமெரிக்காவை விடவும் அதிகமான அளவிற்கு உற்பத்தி செய்து உலகச் சந்தைக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

எனவே சீனாவை மாதிரியாகக் கொண்டு இந்தியா திட்டங்களை வடிவமைத்தால் இதில் வெற்றிபெறலாம்.

 

பல திட்டங்கள்

பல திட்டங்கள்

மோடி தலைமையிலான அரசு அறிவிக்கும் திட்டங்கள் பெரிய அளவில் வெற்றி பெரும் திட்டம் என்று நம்பவைத்தாலும், உண்மையில் அதன் பயன்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவானதாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.

மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா

இந்தியாவில் பல வருடங்களாக இருந்து வந்த திட்டங்களைப் பெயரையும், சில விதிமுறைகளையும் மாற்றிப் புதிதாக வந்தது தான் மேக் இன் இந்தியா. இத்திட்டம் முழுமையாக இந்திய மற்றும் வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களுக்கானது என்றபோதிலும் இதன் மூலம் இந்திய மக்களுக்கு அதிகளவிலான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில் இருந்தது.

ஆனால் மேம் இன் இந்தியா திட்டத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த பல கோடி ரூபாயை விளம்பரம் செய்வதில் செலவிடப்பட்டது மறந்திருக்க முடியாது.

 

பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி

மேக் இன் இந்தியா மூலம் வேலைவாய்ப்போ அல்லது பொருளாதார வளர்ச்சியோ துளிகூட மேம்படவில்லை. சொல்லப்போனால் வேலைவாய்ப்பு சந்தை இந்தியாவில் மிகவும் மோசமான நிலையிலேயே தற்போது உள்ளது. ஆக இதுவும் தோல்வியே என்று கூறலாம்.

நீண்டகாலத் திட்டம்

நீண்டகாலத் திட்டம்

மேக் இன் இந்தியா திட்டம் நீண்ட காலத் திட்டம் என்றாலும் இதை மையப்படுத்தித் தான் மத்திய அரசு அடுத்தச் சில வருடங்களில் நாட்டில் 2 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகத் தெரிவித்தது.

தங்க முதலீட்டுத் திட்டம்

தங்க முதலீட்டுத் திட்டம்

மோடி அரசு பணமதிப்பிழப்புக்கு முன் தங்க முதலீட்டுத் திட்டம், தங்க பத்திர திட்டம் எனப் பலவற்றை அறிவித்து மக்கள் மத்தியில் முழுமையான தோல்வியைச் சந்தித்த நிலையில் தான் பணமதிப்பிழப்பு வந்தது.

 பணமதிப்பிழப்பு

பணமதிப்பிழப்பு

பணமதிப்பழிப்பு மூலம் கருப்புப் பணம், தீவிரவாதம் ஆகியவற்றை முழுமையைாக ஒழிக்கவும், டிஜிட்டல் பணபரிமாற்றம், பணமில்லா பொருளாதாரம் ஆகியவற்றை உருவாக்க முடியும் என அறிவித்தார். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

நாட்டின் பொருளாதாரம் 8 சதவீதத்தை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கும் நிலையில் ஜிஎஸ்டியை அறிவித்து முழுமையாக மொத்த அடிக்கப்பட்டது.

சரி ஜிஎஸ்டியாவது சரியான திட்டமிடல் உடன் அமலாக்கம் செய்யப்படாத என்றால் அதுவுமில்லை, கடந்த வாரம் நடைபெற்ற கூட்டம் முதல் தொடர்ந்து மாற்றங்களைச் செய்து வருகிறது ஜிஎஸ்டி கவுன்சில்.

 

நம்பிக்கை

நம்பிக்கை

ஆனால் மத்திய அரசின் இந்த திட்டம் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. காரணம் தற்போது மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ள அனைத்து துறைகளும் அதிகளவில் மனித சக்தியை நம்பியிருக்கிறது.

இத்துறையில் சில சலுகை அல்லது விதிமுறைகளில் தளர்வு, புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் கூடுதலான வேலைவாய்ப்புகள் உருவாக்க முடியும். பொறுத்திருந்து பார்ப்போம்

 

 மிகப்பெரிய வெற்றி

மிகப்பெரிய வெற்றி

சமோசா விற்க கூகிள் வேலையை விடலாமா.. அதிரடி முடிவின் விளைவு மிகப்பெரிய வெற்றி..!

கல்யாண் ஜூவல்லர்ஸ்

கல்யாண் ஜூவல்லர்ஸ்

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+