சீனாவில் காற்று மாசுகட்டுப்பாட்டைக் குறைக்க அதிகாரிகள் எடுத்த கடுமையான நடவடிக்கையினால் அக்டோபர் மாதத்தின் தொழிற்துறை உற்பத்தி கடுமையாகச் சரிந்துள்ளது.
ஒரு வருடத்தில் தொழிற்சாலைகள் மற்றும் வொர்க்ஷாப் போன்றவை 6.2 சதவீதம் அதிகரித்துள்ளன. ஆனால் செப்டம்பர் மாதம் வரை 6.6 சதவீதமாக இருந்த உற்பத்தியின் வளர்ச்சி அக்டோபர் மாதம் எதிர்பார்த்த 6.3 சதவீதத்தினை விடக் குறைவாக உள்ளது.
முதற்கட்ட நடவடிக்கை
ஸ்டீல் தொழிற்சாலை மற்றும் உருக்காலைகள் போன்றவற்றின் மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் விவகாரங்கள் குறித்து முதற்கட்டமாகச் சீன அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மூடப்பட்ட தொழிற்சாலைகள்
சீன அதிபர் ஜி ஜின்பிங் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட முடிவுகளால் இந்த மாதம் சில தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
தட்டுப்பாடு / விலை உயர்வு
சீன அரசு எடுத்துள்ள இந்த முடிவால் சீனாவில் பல பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும், தேவை அதிகரிக்கும், அதே நேரம் ஏற்றுமதி செய்யப்படும் பல பொருட்களுக்குத் தேவை அதிகரிப்பதுடன் விலையும் உயரப்போகிறது.
காற்று மாசு
சீன தலைநகர் பீஜிங் உட்படப் பல முக்கிய நகரங்களில் காற்று மாசுபட்டு ஆக்சிஜன் சிலிண்டர் பயன்படுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி
இந்தியாவிலும் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபட்டு அசாதாரணச் சூழல் நிலவி வரும் நிலையில் மக்கள் அவதிப்படக் கூடிய வாகனங்களைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடு போன்றவற்றையே எடுத்துள்ளனர். அதில் தேவையில்லாத விவசாயப் பொருட்களை எரிப்பதற்குத் தடை விதித்துள்ளன. எந்த அளவில் தொழிற்சாலைகள் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று பார்க்க வேண்டியது அவசியம்.


Click it and Unblock the Notifications