நாஸ்காம் அமைப்பின் முதல் பெண் தலைவர்..!
இந்திய ஐடி நிறுவனங்களின் தலைமை அமைப்பான நாஸ்காம் தலைவராக முதல் முறையாக பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரையில் ஆண்கள் மட்டுமே நாஸ்காம் அமைப்பின் தலைவராக இருந்த நிலையில், பெண் நியமிக்கப்பட்டதன் மூலம் புதிய வரலாறு துவங்கியுள்ளது.
இந்த அமைப்பின் தலைவராக இருக்கும் ஆர்.சந்திரசேகரனின் பதவி காலம் முடிவடையும் நிலையில், புதிய தலைவராக டெப்ஜானி கோஷ் நியமிக்கப்பட்டார். இவரது பணி சந்திரசேகரன் வெளியேறிய பின்பு துவங்கும்.

டெப்ஜானி கோஷ், இன்டெல் தென்ஆசியா வர்த்தகத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஆவார்.
ஆனால் நாஸ்காம் அமைப்பிற்கு டெப்ஜானி புதிதானவர் இல்லை, இவர் ஏற்கனவே இந்த அமைப்பின் நிர்வாக குழுவில் மற்றும் நாஸ்காம் பவுன்டேஷன் அமைப்பு டிரஸ்டியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications