பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பேஷன் இ-டெய்லர் நிறுவனமான வூனிக் 200 ஊழியர்களுக்கு மூன்று மாதம் சம்பளம் அளிக்க முடியாது என்று கூறியுள்ளது.
வூனிக் நிறுவனத்தில் 350 ஊழியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தில் இந்த முடிவை எடுத்துள்ளதாக இது குறித்து விவரம் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.
எந்தப் பிரிவு ஊழியர்களுக்குப் பாதிப்பு?
உற்பத்தி வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர்கள் சேவை பிரிவைச் சார்ந்த ஊழியர்களே பெறும் அளவில் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஆனால் ஆப்ரேஷன்ஸ் பிரிவில் பாதிப்பு ஏதும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளனர்.
ஊழியர்கள் ராஜினாமா செய்தால்
வூனிக் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குனரான சுஜாயந்த அலி ஊழியர்கள் ராஜினாமா செய்தால் அவர்களுக்கு ஒரு மாத சம்பளம் அளிக்கப்படும் என்று நேற்று நடைபெற்று நிறுவன கூட்டத்தில் முடிவு செய்துள்ளார்.
வூனிக்
இ-காமர்ஸ் நிறுவனமான ஸ்னாப்டீல் ஏற்கனவே எப்படிப் போட்டி நிறுவனங்களைச் சமாளிக்க முடியாமல் வீழ்ந்ததோ அதே போன்று வூனிக் நிறுவனமும் மைந்தரா, ஜபாங் மற்றும் அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களின் வளர்ச்சியுடன் போட்டுப்போட முடியாமல் திணறி வருகிறது.
மூத்த ஊழியர்கள்
பேஷன் இ-டெய்லர் நிறுவனமான வூனிக் சந்தையில் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க அதிகச் சம்பளம் வாங்கும் மூத்த ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் எண்ணத்திலும் இல்லை.
நிதி சிக்கல்
ஆன்லைன் மார்க்கெட்டிங் மற்றும் விளம்பர சேவைக்காக அதிகளவில் சென்ற ஆண்டு முதலீடு செய்த வூனிக் நிறுவனத்தால் இந்த ஆண்டுப் பெரிதாக நிதியைத் திரட்ட முடியவில்லை. எனவே பல மூத்த அதிகாரிகள் பணியில் இருந்து ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications