ஸ்பைஸ் ஜெட் இரண்டாம் காலாண்டு அறிக்கை.. 79% உயர்வு!
ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் திங்கட்கிழமை வெளியிட்ட 2017-2018 நிதி ஆண்டிற்கான இரண்டாம் காலாண்டு அறிக்கையில் 79 சதவீதம் லாபம் உயர்ந்துள்ளதாகவும், பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

ஸ்பைஸ்ஜெட் மெர்ச்சன்டிஸ் மற்றும் ஸ்பைஸ்ஜெட் டெக்னிக் ஆகிய பிரிவுகள் இல்லாமல் 105 கோடி ரூபாய் நிகர லாபத்தினைப் பெற்றுள்ளது. இதுவே சென்ற ஆண்டு 58.9 கோடியாக இருந்தது.
நிகர வருவாய் 30 சதவீதம் உயர்ந்து 1,797 கோடி ரூபாயினைப் பெற்றுள்ளது.
அதிகரித்த பயணிகளின் அளவு, சராசரியான கட்டணம் மற்றும் புதிய வழித்தடங்கள் போன்றவற்றால் 7 சதவீதம் உயர்வைச் சந்தித்துள்ளது. எவ்வளவு விமானப் பயணிகள் கொண்டு செல்லும் திறன் உள்ளது என்பது 94 சதவீதம் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications