நீண்ட காலமாக இந்திய ஐடி நிறுவனங்களுக்கு 150 பில்லியன் டாலர் மதிப்புடைய மிகப் பெரிய சந்தையாக இருந்தது அமெரிக்கா. இப்போதும் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு மூன்றில் 2 பங்கு வருமானம் அமெரிக்காவில் இருந்து தான் கிடைத்து வருகிறது.
ஆனால் கடந்த சில காலாண்டுகளாக ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து அதிக வளர்ச்சியினை இந்திய ஐடி நிறுவனங்கள் பெற்று வருகின்றன. அமெரிக்காவில் உள்ள அதிகப்படியான அழுத்தங்களால் வங்கி மற்றும் நிதித் துறை நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம் சரிந்து இந்திய ஐடி நிறுவனங்களுக்குப் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பியாவில் அவுட்சோர்சிங்
பிரிக்சிட் பிரச்சனைகளுக்குப் பின்பு இங்கிலாந்தைத் தவிர அவுட்சோர்சிங் செய்ய முன்வராமல் இருந்த பிற ஐரோப்பிய நிறுவனங்களும் இந்திய ஐடி நிறுவனங்களை நாடத் துவங்கியுள்ளன. அதனால் அமெரிக்காவில் இருந்து வரும் வருவாய் நிலையாக இருந்தும் ஐரோப்பிய நாடுகளின் வருவாய் கூடுதலாக்க கிடைத்துள்ளதால் வளர்ச்சி அதிகமாக உள்ளது.
டிசிஎஸ்
செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டால் காலாண்டு அறிக்கையில் டிசிஎஸ் நிறுவனம் ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து 5.3 சதவீதமும், அமெரிக்காவில் இருந்து 5.7 சதவீதம் வளர்ச்சியினைப் பெற்றுள்ளது. வட அமெரிக்காவில் பெறும் அளவில் வர்த்தகம் சரிந்துள்ளதாகவும் டிசிஎஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி கோபிநாதன் தெரிவித்துள்ளார்.
வருவாய்
டிசிஎஸ் நிறுவனத்தின் 56 சதவீத வருவாய் அமெரிக்காவில் இருந்து வரும். ஆனால் அதுவே இந்த ஆண்டு 54.1 சதவீதமாகச் சரிந்துள்ளது.
விப்ரோ
டிசிஎஸ் நிறுவனம் போன்று விப்ரோ நிறுவனத்திலும் அமெரிக்காவில் ஆண்டுக்கு 2.8 சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதம், இந்த ஆண்டு 0.5 சதவீதமாகச் சரிந்துள்ளது. அதே நேரத்தில் ஐரோப்பிய நாடுகளில் 5.8சதவீதமாக இருந்து வந்த வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டும் 9.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அமெரிக்க வருவாய் இந்த ஆண்டு 61.5 சதவீதத்தில் இருந்து 60.6 சதவீதமாகச் சரிந்துள்ளது. விப்ரோ நிறுவன வருவாய் 54.8 சதவீதத்தில் இருந்து 53.6 சதவீதமாகச் சரிந்துள்ளது.
காக்னிசென்ட்
காக்னிசென்ட் நிறுவனத்திற்கு அமெரிக்காவில் இருந்து 1.4 சதவீதம் வளர்ச்சி மட்டுமே பெற்றுள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து 8.5 சதவீத வளர்ச்சியினைப் பெற்றுள்ளது. அமெரிக்காவில் இருந்து 78.5 சதவீதம் வருவாயினை 2016-ம் ஆண்டு வரை பெற்று வந்த காக்னிசென்ட் 2017-ம் ஆண்டில் 76.8 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளது.
குறிப்பு
மேலே கூறிய விவரங்கள் அனைத்தும் 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளின் செப்டம்பர் மாதம் வரையிலான தரவை வைத்துக் கூறப்பட்டுள்ளது ஆகும்.
ஏர்ஏசியாவின் அதிரடி ஆஃபர்..
ஐடியா, வோடபோன்


Click it and Unblock the Notifications