அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் இந்திய நிறுவனங்கள் 18 பில்லியன் டாலர் முதலீடும், 1,13,000 வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளதாகச் சிஐஐ அமைப்பு வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டில் 100க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் வர்த்தகம் செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
100 இந்திய நிறுவனங்கள்
கொலம்பியா, புவேர்ட்டோ ரிக்கோ உட்பட அமெரிக்காவின் 50 மாநிலங்களில் டாப் 100 இந்திய நிறுவனங்கள் 1,12,423 வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அதுமட்டும் அல்லாமல் இக்காலகட்டத்தில் 17.6 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டையும் செய்துள்ளனர்.
ஆராய்ச்சி
அதுனுடன் சமுகப் பணிகளுக்காக 147 மில்லியன் டாலரும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக 588 மில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளதாகச் சிஐஐ அமைப்பு வெளியிட்ட இந்தியன் ரூட்ஸ், அமெரிக்கன் சாயில் என்ற தலைப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐடி நிறுவனங்கள்
இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் வர்த்தகம் செய்தும் பெரும்பாலான நிறுவனங்கள் ஐடி நிறுவனங்கள், இத்துறை நிறுவனங்கள் இந்தியாவில் வேலைவாய்ப்புகளைத் தொடர்ந்து குறைத்து வரும் நிலையில், அமெரிக்காவில் 1.13 லட்ச வேலைவாய்ப்புகளை உருவாக்கியது இந்தியர்கள் மத்தியில் வருத்தத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
முக்கிய நகரம்
இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் நியூஜெர்சியில் 8,572 வேலைவாய்ப்புகளை அளித்து அசத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து டெக்சாஸ் பகுதியில் 7,271 , கலிபோர்னியாவில் 6,749, நியூயா்ர்க் 5135, ஜார்ஜியா பகுதியில் 4,554 வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
முக்கிய முதலீடு
அதேபோல் நகர வாரியான முதலீட்டில் இந்திய நிறுவனங்கள் நியூயார்க் பகுதியில் அதிகளவிலான முதலீட்டை செய்துள்ளது.
நியூயார்க் - 1.57 பில்லியன் டாலர்
நியூஜெர்சி - 1.56 பில்லியன் டாலர்
மாசசூசெட்ஸ் - 931 மில்லியன் டாலர்
கலிப்போர்னியா - 542 மில்லியன் டாலர்
வாயோமிங் - 435 மில்லியன் டாலர்
சராசரி அளவீடு
அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலத்திலும் இந்திய நிறுவனம் சராசரியாக 187 மில்லியன் டாலர் அளவிற்குப் பணத்தை முதலீடு செய்துள்ளது. இதில் 85 சதவீதம் நிறுவனங்கள் தொடர்ந்து அதிகமான அளவிற்கு முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு
மேலும் அமெரிக்காவில் இருக்கும் இந்திய நிறுவனங்களில் 87 சதவீதம் நிறுவனங்கள் அடுத்த 5 வருடத்தில் அதிகளவிலான ஊழியர்களைப் பணியில் அமர்த்தத் திட்டமிட்டுள்ளது. இதனால் இந்தியாவில் புதிதாக உருவாகும் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை பாதிக்கும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications