நாட்டின் முன்னணி கல்லூரிகளில் ஒன்றான ஐஐடி மற்றும் அதன் கிளை கல்லூரிகளில் ஒவ்வொரு வருடமும் வேலைவாய்ப்பு அளிப்பதற்காக இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் வரும்.
இந்த வருடம் கணினி மற்றும் மொபைல் தொழில்நுட்பத்தில் ஜாம்பவானாகத் திகழும் ஆப்பிள் நிறுவனம் இந்த வருடம் ஐஐடி பாம்பே கல்லூரி மாணவர்களுக்காக வேலைவாய்ப்பை அளிக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக 2017ஆம் பிளேஸ்மென்ட்ல் ஆப்பிள் கலந்துகொள்வது உறுதியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தில் சேர விரும்பும் மாணவர்களுக்கான முதற்கட்ட தேர்வுக்கான விண்ணப்பம் நவ.12ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு மாணவர்களின் செமஸ்டர் பரிட்சைக்கு நிகழும் எனவும் தெரிகிறது.

பெரும்பாலும் அமெரிக்க நிறுவனங்கள் கொடுக்கும் வேலைவாய்ப்புகள் அனைத்தும் அமெரிக்கா அல்லது ஐரோப்பிய அலுவலகங்களில் மட்டுமே இருக்கும், ஆனால் தற்போது ஆப்பிள் அளிக்கும் வேலைவாய்ப்புகள் அதிகமானவை தனது இந்திய அலுவலகங்களுக்கானவை. இதனால் மாணவர்கள் மத்தியில் இத்தேர்வில் கலந்துகொள்ளும் ஆர்வம் சற்று குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications