மோடிக்கு கிடைத்த அடுத்த மகுடம்.. இந்தியாதான் உலகிலேயே நம்பிக்கையான அரசாம்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, ஏற்றுமதி சரிவு, பெட்ரோல்,டீசல் விலை உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷனின் புதிய சம்பளத்தை அளிக்காமல் காலம்கடத்துவது எனத் தொடர்ந்து மத்திய அரசு மீதும், பிரதமர் மோடி மீதும் தொடர்ந்து அதிர்ப்திகள் நிலவிய நிலையில் 14 வருடங்களுக்குப் பின் மூடி அமைப்பு இந்தியாவின் பத்திர தரத்தை உயர்த்தியது.

இது இந்திய சந்தையை மட்டும் அல்லாமல் உலக நாடுகளையும் கவனிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மோடிக்கும், மோடி அரசுக்கும் புதிதாக ஒரு மகுடம் கிடைத்துள்ளது.

நம்பிக்கையான அரசு.

உலக நாடுகளிடையே நம்பிக்கையான அரசு மற்றும் நிர்வாகம் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் உலகின் முன்னணி நாடுகள் அனைத்தும் இடம்பெற்று இருந்த நிலையிலும் இந்தியா டாப் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

மகுடம்

இத்தகைய நம்பிக்கையான அரசுக்குப் பிரதமராக இருப்பது நரேந்திர மோடி ஆவார். இவரது ஆட்சியிலேயே இந்தியா இத்தகைய நிலையை அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முக்கியக் காரணிகள்

இந்த ஆய்வில் ஒரு நாட்டின் பொருளாதாரம், அதன் வளர்ச்சி, அரசியல் பிளவுகள் மற்றும் பிரச்சனை, தலைப்புச் செய்திகளில் வரும் ஊழல் குற்றச்சாட்டுகள் என நாட்டின் நிர்வாகத்தைப் பாதிக்கும் அனைத்து விஷயங்களையும் முன்னிலைப்படுத்தித் தத்தம் நாடுகள் மீது நம்பிக்கை உள்ளதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முக்கியக் காரணம்

உலகிலேயே நம்பிக்கையான அரசுகள் பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்தற்கு முக்கியக் காரணமாக, மோடி தலைமையிலான அரசு எடுக்கப்பட்டுள்ள ஊழில் தடுப்பு நடவடிக்கைகள், வரிச் சீர்திருத்தங்கள் ஆகியவை முக்கியக் காரணமாக விளங்குகிறது.

இந்த ஆய்வை Gallup World Poll என்ற அமைப்பு நடத்தியுள்ளது. மேலும் இந்த ஆய்வின் முடிவுகள் 1000பேர் அளித்த பதில்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது என இந்த அமைப்புக் கூறுகிறது.

 

அமெரிக்கா

நம்பிக்கையான அரசுகள் பட்டியலில் உலகின் வல்லரசு நாடாகத் திகழும் அமெரிக்கா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபலம்

சமீபத்தில் 2,464 பேர் கலந்துகொண்ட pew வாக்கெடுப்பில் நாட்டின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதல் இடத்தைப் பிடித்தார். மோடியைத் தொடர்ந்து ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் ஆகியோர் இடம்பிடித்தனர்.

முதல் 3 இடங்கள்

நம்பிக்கையான அரசுகள் குறித்த செய்யப்பட்ட ஆய்வில் முதல் 3 இடங்களில் சுவிஸ், இந்தோனேசியா, இந்தியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளது.

முழுப் பட்டியல்

இந்தியாவைத் தொடர்ந்து இப்பட்டியலில் லக்சம்பர்க், நார்வே, கனடா, துருக்கி, நியூசிலாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, பின்லாந்து, சுவீடன், டென்மார்க், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India is Third Most Trusted Govt in the World: Next crown for modi

India is Third Most Trusted Govt in the World: Next crown for modi
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns