மோடி தலைமையிலான அரசு கருப்புப் பணத்திற்கு எதிராகத் தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் 80%க்கும் அதிகமாகப் பணம் புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாயைபுழக்கத்தில் இருந்து முழுமையாக நீக்கியது.
இந்த நடவடிக்கை வெற்றி அடையவில்லை என்றாலும் மத்திய அரசு தொடர்ந்து கருப்புப் பணத்தையும், கருப்புப் பணம்அதிகமாகப் புழங்கும் துறையையும் கண்காணித்து வருகிறது.
இதன் படி தற்போது ரியல் எஸ்டேட் துறையைக் கையில் எடுத்துள்ளது மத்திய அரசு.
ஆதார் இணைப்பு
கருப்புப் பணத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கையில் இது முக்கியமானதாக இருக்கும் எனக்கருதப்படுகிறது.
வீடு, நிலம், சொத்துப் பரிமாற்றம் என அனைத்து வகையிலான பரிமாற்றங்களுக்கும் ஆதார் இணைப்பைக் கூடியவிரைவில் கட்டாயமாக்கப்படலாம் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரியல் எஸ்டேட்
இந்திய ரியல் எஸ்டேட் துறையில் அதிகளவிலான கருப்புப் பணம் புழங்குவது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகஇருக்கும் நிலையில் இதனை முழுமையாகக் களையும் வகையில் சொத்து பரிமாற்றத்தின் போதும் ஆதார்இணைப்பைக் கட்டாயப்படுத்தும் நாள் தொலைவில் இல்லை என மத்திய வீட்டு வசதி துகை அமைச்சர் ஹர்தீப் பூரிதெரிவித்துள்ளார்.
வங்கி இணைப்பு
சொத்து பரிமாற்றத்தின் போது ஆதார் இணைப்பு சிறந்த ஐடியாவாக இருந்தாலும், தற்போது ஆதார் இணைப்பை வங்கிகணக்கு போன்ற பிறவற்றுடன் இணைக்கும் பணி தொடர்வதால், அடுத்தச் சில மாதங்களில் இதற்கான நடவடிக்கைகள்எடுக்கப்படும்.
பினாமி சொத்துகள்
மோடியும் பல முறை பினாமி சொத்துகளைக் களையும் நடவடிக்கை குறித்துப் பேசியுள்ளார். இந்நிலையில் சொத்துபிரிமாற்றத்தின் போது ஆதார் இணைப்புக் கருப்பு பண ஆசாமிகளுக்குப் பெரிய அளவிலான நெருக்கடியை அளிக்கும்.
மோசமான நிலை
ஏற்கனவே இந்திய ரியல் எஸ்டேட் துறை RERA மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மோசமான நிலையை அடைந்துள்ளநிலையில், அனைத்து விதமான சொத்து பரிமாற்றத்திற்கும் ஆதார் கட்டாயப்படுத்தினால் மொத்த ரியல் எஸ்டேட்வர்த்தகமும் பாதிப்படையும்.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications