இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனக்கென ஒரு அழுத்தமான இடத்தைப் பிடித்துள்ள மஹிந்திரா நிறுவனம் தனது வர்த்தகம் மற்றும் உற்பத்தியைத் துவங்கி 25 வருடங்களுக்குப் பின் இப்போது தான் முதல் முறையாக உலகின் கார் தயாரிப்பின் சொர்க்கமாகக் கருதப்படும் அமெரிக்காவின் டெட்ராய்ட் பகுதியில் புதிய தொழிற்சாலையைத் துவங்கியுள்ளது.
முதலீடு
பலக்கட்ட முயற்சிகளுக்குப் பின்பு மஹிந்திராவின் ஆட்டோமொபைல் வர்த்தகப் பிரிவு டெட்ராய்ட் பகுதியில் 230 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் தனது புதிய உற்பத்தி ஆலையைத் துவங்கியுள்ளது.
வேலைவாய்ப்பு
ஐடி நிறுவனங்களின் வரியாகத் தற்போது மஹிந்திராவின் ஆட்டோமொபைல் பிரிவின் புதிய தொழிற்சாலை அமெரிக்கா மண்ணில் துவங்கப்பட்டுள்ளது. இப்புதிய தொழிற்சாலையின் மூலம் சுமார் 250 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என மஹிந்திரா குழுமம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
விரிவாக்கம்
அமெரிக்காவில் அமைக்கப்பட்ட இத்தொழிற்சாலையின் மூலம் மஹிந்திராவின் பிராண்டு வட அமெரிக்கா மற்றும் மிச்சிகன் பகுதியில் பிரபலம் அடையப் பெரிய அளவில் உதவி செய்யும்.
3 மடங்கு
உற்பத்தி மற்றும் வர்த்தகம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் இத்தொழிற்சாலையின் ஊழியர்கள் எண்ணிக்கையை அடுத்த 18 மாதத்தில் 3 மடங்கு அதிகரிக்கவும் வாய்ப்புகள்ளது, அதேபோல் அமெரிக்காவில் மஹிந்திராவின் வளர்க்கு நீங்கள் தான் அஸ்திவாரம் என இதன் திறப்பு விழாவில் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்தார்.
2020 இலக்கு
இத்திட்டத்துடன் சில இணைப்பு திட்டங்களையும் செயல்படுத்த மஹிந்திரா ஆட்டோமோடிவ் நார்த் அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 2020ஆம் ஆண்டுக்குள் 600 மில்லியன் டாலர் முதலீடும், 400 கூடுதல் வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது மஹிந்திரா நிர்வாகம்.
30 கிளைகள்
அமெரிக்காவில் சுமார் 30 கிளைகளும், 1 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டையும் கொண்டு மஹிந்திரா அமெரிக்கச் சந்தையில் வர்த்தகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications