ஆர்காம் நிறுவனம் ஏர்செல் உடனான டீல் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து ப்ரூக்ஃபீல்டு நிறுவனத்துடனான வர்த்தக ஒப்பந்தத்திலும் தோல்வி அடைந்தது. இதனால் ஏற்கனவே 45,000 கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவித்து வரும் ஆர்காம் அடுத்ததாக ஒரு முடிவை எடுத்துள்ளது.
ஆர்காம் நிறுவனத்தின் இந்த அடுத்தத் திட்டம் நிறைவேறினால் 800 கோடி ரூபாயினைத் திரட்ட முடியும்.
ரியல் எஸ்டேட்
கடன் சிக்கலில் தவித்து வரும் ஆர்காம் நிறுவனமானது தன்வசம் உள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்களை விற்பதன் மூலமாக 801 கோடி ரூபாய் என்று எதிர்பார்க்கிறது. சென்ற வாரம் இந்த நிறுவனம் டாலர் பத்திரங்கள் நிலுவை வழங்க முடியாமலும் சிக்கியுள்ளது.
டெல்லி மற்றும் சென்னை
ஆர்காம் நிறுவனத்திற்குக் கடன் வழங்கியவர்கள் டெல்லி மற்றும் சென்னையில் உள்ள சொத்துக்களை விற்க ப்ரூக்ஃபீல்டு நிறுவனத்திற்கு 801 கோடி ரூபாய்க்கு விற்க அனுமதி அளித்துள்ளனர்.
நவி மும்பை
ஆர்காம் நிறுவனம் தற்போது நவி மும்பையில் உள்ள திருபாய் அம்பானி க்னாலேஜ் சிட்டிக்கு முதலீட்டாளர்கள் அல்லது வாங்குபவர்கள் யாராவது உள்ளார்களா என்று ஆராய்ந்து வருகிறது. 125 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தச் சொத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடன்
45,000 கொடி ரூபாய் கடனில் சிக்கியுள்ள ஆர்காம் நிறுவனத்திற்கு 25,000 கோடி ரூபாய் கடனை உள்நாட்டிலும், 20,000 கோடி ரூபாயினை வெளிநாட்டு கடன் மற்றும் பத்திரங்கள் மூலமாகவும் பெற்றுள்ளது.
தோல்வியால் வந்த சிக்கல்
இதுவே ஏர்செல் மற்றும் ப்ரூக்ஃபீல்டு இடையிலான ஒப்பந்தம் நிறைவேறியிருந்தால் எளிதாக இந்த 45,000 கொடி ரூபாய் கடன் சிக்கலில் இருந்து ஆர்காம் நிறுவனம் மீண்டு இருக்கும்.
பங்குகள்
சென்ற வாரம் 7,000 கோடி ரூபாய் கடனினை ஆர்காம் நிறுவனம் திருப்பிச் செலுத்துவதற்காக 51 சதவீத பங்குகளை வங்கிகளுக்கு விற்கும் முடிவுக்கு ஒப்புக்கொண்டது. திங்கட்கிழமை வரை ஆர்காம் நிறுவனத்தின் பங்குகள் 3,900 கோடியாக உள்ளது.
சொத்துக்கள்
அதுமட்டும் இல்லாமல் 17,000 கோடி ரூபாய் கடனை தன் வசம் உள்ள சொத்துக்களை விற்று அளிக்க ஆர்காம் நிறுவனம் முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications