இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா நேனோ கார் விற்பனை சரிந்து வரும் இந்த நேரத்தில் தற்போது அதனை எலக்டிரிக் கார் ஆக வடிவமைத்து விற்பனை செய்ய டாடா குழுமம் முடிவு செய்துள்ளது.
இது போன்று ஏற்கனவே மகேந்திரா நிறுவனம் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் நீண்ட காலமாக உள்ள நிலையில் டாடா நிறுவனம் அதில் இறங்கியுள்ளது.
எலக்ட்ரிக் டாக்ஸி சேவை
சில மாதங்களுக்கு முன்பு நாக்பூரில் எப்படி டெலக்ட்ரிக் கால் டாக்ஸி கார்களை மகேந்திரா நிறுவனம் ஓலா உடன் இணைந்து சேவை துவங்கியதோ அதே போன்று விரைவில் டாடா நிறுவனம் ஓலா உடன் இணைந்து டெல்லியில் எலக்ட்ரிக் கார் சேவையினை வழங்க உள்ளது.
டெல்லியில் அறிமுகம்
டெல்லியில் அறிமுகம் செய்ய உள்ள இந்தத் திட்டம் அங்கு உள்ள காற்று மாசுப்பாட்டைக் குறைக்க அரசுடன் சேர்ந்து நடத்த உள்ள திட்டமாகும். இதற்கான சோதனையும் தற்போது டாடா நேனே நடத்தியுள்ளது.. இந்தச் சோதனை ஓட்டம் தமிழகத்தின் கோயம்புத்தூரில் செப்டம்பர் மாதம் நடைபெற்றது.
மகேந்திராவுக்குப் போட்டி
டாடா நேனோ கார் அறிமுகம் செய்தபிறகு மகேந்திராவின் e2o காருக்கு மிகப் பெரிய போட்டியாக இது இருக்கும். தற்போது பெங்களூரு சேர்ந்த பல டாக்ஸி நிறுவனங்கள் எலக்ட்ரிக் காரை சேவைக்கு அறிமுகம் செய்துள்ளன.
டாடா டியாகோ
டாடா நிறுவனம் அடுத்தடுத்து தங்களது தயாரிப்புகள் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்துள்ளது. அதன் ஒரு கட்டமாக டியாகோ எலக்ட்ரிக் காருடன் டைகர் எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யவும் டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications