குளிர் சாதன பெட்டி மற்றும் ஏசி போன்ற பொருட்கள் மீதான விலை 2018 ஜனவரி முதல் 3 முதல் 4 சதவீதம் வரை உயரும் என்றும் இதற்கு உள்ளீட்டுச் செலவுகள் அதிகரித்து இருப்பது என்றும் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே ஜிஎஸ்டி அமலுக்கு வந்த போது இந்தப் பொருட்கள் மீதான விலை எல்லாம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
ஜிஎஸ்டி
உற்பத்தியாகளர்கள் சில மாதங்களுக்கு முன்பாகவே தங்களது தயாரிப்புகள் மீதான விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன. ஆனால் இது ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததால் சாத்தியப்படவில்லை.
ரீடெய்ல்
எனவே ரீடெய்ல் கடைக்காரர்கள் தங்களிடம் உள்ள தீபாவளியின் போது முடிந்த வரை தங்களிடம் ஏற்கனவே உள்ள பொருட்களை விற்றது மட்டும் இல்லாமல் விலை உயர்வையும் எதிர்பார்த்து வருகின்றனர்.
மூலப் பொருட்கள்
ஸ்டீல், காப்பர் போன்ற முக்கிய மூலப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் குளிர்சாதனப் பெட்டி மற்றும் ஏசி போன்றவற்றின் விலை உயரப்போகிறது.
கோத்ரேஜ்
ஏசி, குளிர்சாதனப் பெட்டி போன்றவற்றைத் தயாரிக்க 70 சதவீதம் வரை இந்த முக்கியப் பொருட்கள் தேவைப்படுவதால் விலையில் 5 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை தக்கம் இருக்கும். ஆனால் இதைச் சரிக்கட்டுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகக் கோத்ரேஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வீடியோகான்
விடியோகான நிறுவனம் ஏசி, குளிர்சாதனப் பெட்டி மற்றும் சமையல் அறைக்குத் தேவையான தயாரிப்புகளில் 2 முதல் 4 சதவீதம் வரை ஜனவரி முதல் விலை உயர்வு இருக்கும் என்று கூறியுள்ளது.
எல்ஜி மற்றும் சாம்சங்
ஏற்கனவே எல்ஜி மற்றும் சாம்சங் போன்ற முக்கிய நிறுவனங்கள் ஏசி, குளிர்சாதனப் பெட்டி போன்ற பொருட்கள் மீதான விலையினை உயர்த்த முடிவு செய்துள்ள நிலையில் தற்போது பிற நிறுவனங்களும் ஜனவரி 1 முதல் விலை உயர்வதை உறுதி செய்துள்ளன.
எனவே விரைவில் 5 நட்சத்திர ஏசி, குளிர்சாதனப் பெட்டி போன்ற பொருட்களின் விலை உயரும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications