ஐபிசி மசோதா நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..!

இந்திய வங்கிகளில் வராக்கடன் மற்றும் செயல்படா சொத்துக்களின் மதிப்பு ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வரும் நிலையில், இதனை அரசு இரும்புக் கரம் கொண்டு கட்டுப்படுத்தவும் முறையாக வசூல் செய்யும் பணிகளில் ஈடுப்படவும் மத்திய நிதியமைச்சர் ஐபிசி மசோதாவில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார்.

ஐபிசி மசோதாவில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக நேற்று அனுப்பப்பட்டது.

இந்நிலையில் இதற்கான ஒப்புதலைக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அளித்துள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

ஐபிசி மசோதா

ஐபிசி மசோதா

தனிநபர், குடும்பம், சிறிய நிறுவனம் முதல் பெரிய நிறுவனம் வரையில், கார்ப்பரேட் என அனைத்துத் தரப்பினரும் ஒருகட்டத்தில் வராக்கடன் அல்லது செயல்படா சொத்துகள் மூலம் வங்கி மற்றும் மக்கள் பணத்தைத் திவாலாக்கி விடுகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில் உரிய நபர்களிடம் இருந்து மக்கள் அல்லது வங்கிகள் இழந்த பணத்தைத் திரும்பப்பெறும் சட்ட விதிமுறைகளைத் தான் Insolvency and Bankruptcy Code என அழைக்கப்படுகிறது.

இன்று குடியரசு ஒப்புதல் அளித்த ஐபிசி மசோதாவில் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்.

 

தகுதி நீக்கம்..

தகுதி நீக்கம்..

ஒரு நிறுவனத்தின் தலைவர் நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு வருடத்திற்கு அதிகமான காலத்திற்கு வராக்கடனை வைத்திருந்தால் அவருடைய தகுதி நீக்கப்படும். இதன் மூலம் ஏந்தொரு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாகப் பொறுப்பில் இருக்க முடியாது.

சொத்துக்களை வாங்க முடியாது..

சொத்துக்களை வாங்க முடியாது..

வராக் கடன் வரலாறு கொண்டவர்கள், வங்கிகள் கைப்பற்றியுள்ள அவர்களது செயல்படா சொத்துக்களை ஏலத்தில் எடுக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.

நொடித்தது..

நொடித்தது..

ஒரு சொத்து அல்லது நிறுவனத்தை நிதியில்லாமல் நொடித்தது என ஒரு நிறுவனமோ அல்லது கடன் கொடுத்தவர்களோ தாக்கல் செய்யலாம். கடன் கொடுத்தவர்கள் கடன் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்.

ஹோம்பையர்ஸ்..

ஹோம்பையர்ஸ்..

இனி ஹோம்பையர்ஸ் நிதி கடன் அளிப்போர் அல்லது செயல்பாட்டு கடன் அளிப்போர் பிரிவில் இருக்கமாட்டார்கள், இவர்கள் இனி மூன்றாம் பிரிவான ஹோம்பையர்ஸ் ஆக இருப்பார்கள்

பார்ம் எப்

பார்ம் எப்

ஹோம்பையர்ஸ் கடன் வழங்குவோர் அல்ல, ஆனால் பார்ம் எப் படிவத்தை மத்திய அரசு அளிக்கும் அதனை அவர்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.

 ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட்

RERA வந்த பின்பும் டெவலப்பர் மீது திவால் அல்லது நொடித்துத் தாக்கல் செய்யப்படும் உரிமை உண்டு. தாக்கல் செய்யப்பட்ட அவர்களின் சொத்துக்கள் அனைத்தும் ஏலத்திற்கு விடப்படும்.

 14 பேர் அமைப்பு

14 பேர் அமைப்பு

ஒருவர் மீது திவால் தாக்கல் செய்யப்பட்டால் அவர்களின் சொத்துகள் அல்லது பணத்தை எப்படி மீட்டு எடுக்க வேண்டும் என் 14 பேர் கொண்ட அமைப்பை மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

தலைவர்

தலைவர்

இந்த 14பேர் கொண்ட அமைப்பின் தலைவராகக் கார்பரேட் விவகார துறை செயலாளர் இன்ஜித் ஸ்ரீநிவாஸ் தலைவராக இருப்பார். ஐபிசி விதிமுறைகளையும் இவர் தலைமையில் தான் விதிக்கப்படும்.

வழக்குகள்

வழக்குகள்

தற்போதைய நிலையில் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் விதிகளின் படி சுமார் 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒப்புதல் தேவை

ஒப்புதல் தேவை

ஐபிசி மசோதா தாக்கல் செய்யப்படும் போதும் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஒப்புதலும் பெற வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+