டாடா டெலிசர்வீசஸ் பயனர்கள் நேற்று முதல் ஏர்டெல் நிறுவனத்தின் மொபைல் நெட்வொர்க் சேவைக்கு மாறி வருகின்றனர். டாடா நிறுவனம் எந்த விலையும் பேசாமல் தொலைத்தொடர்பு துறை வர்த்தகத்தினை ஏர்டெல் நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது. அதற்காக ஏர்டெல் நிறுவனம் டிடிஎச் சேவையினை டாடா குழுமத்திற்கு அளிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது.
மொபைல் சேவை இணைவின் முதற்கட்டமாக உத்திரபிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் டாடா பயனர்கள் ஏர்டெல் பயனர்களாக மாற்றப்பட்டு வருகின்றனர்.
முழுமையாக எப்போது மாறும்
அடுத்த சில வாரங்களில் டாடா டெலிசர்வீசஸ் மொபைல் சேவை பயன்படுத்தும் அனைத்து பயனர்களும் ஏர்டெல் நிறுவனத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
எப்படி சேவை மாற்றப்படுகிறது
உள் வட்ட ரோமிங் (ICR) ஏற்பாடு மூலமாக டாடா டெலிசர்வீசஸ் மொபைல் சேவை பயனர்கள் ஏர்டெல் நிறுவன பயனர்களாக மாற்றப்படுகின்றனர்.
ஒழுங்குமுறை பணிகள்
டாடா குழுமம் மற்றும் ஏர்டெல் நிறுவனமும் அன்மையில் டாடா டெலிசர்வீசஸ் மற்றும் டாடா டெலிசர்வீசஸ் மகாராஷ்டிராவும் ஏர்டெல் உடன் இணைய இருப்பதாக அறிவித்தன. இந்த இனைவிற்கான ஒழுங்குமுறை பணிகள் நடைபெற்று வருகின்றன.
உறுதி
பார்தி ஏர்டெல் நிறுவனம் டாடா பயனர்களுக்கு இந்த இணைவால் எந்த பாதிப்பும் இருக்காது என்றும், பழைய சேவைகளை அப்படியே தொடரலாம் என்றும் உறுதி அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications