இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புகளை அளித்து வரும் ஐடி நிறுவனங்கள் ஏற்கனவே அமெரிக்காவின் ஹெச்1பி விசா, புதிய தொழில்நுட்பத்தின் ஆதிக்கம், ஆட்டோமேஷன், புதிய வர்த்தகம் இல்லாமல் போராட்டம் எனப் பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் சிக்கிக்கொண்டு இருக்கும் நிலையில் இந்திய வருமான வரித் துறை சுமார் 200 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனால் ஒட்டுமொத்த இந்திய ஐடி மற்றும் ஐடிஸ் நிறுவனங்களும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.
200 நிறுவனங்கள் தவிப்பு
2012-2016 வரையிலான காலத்தில் இந்திய ஐடி மற்றும் ஐடிஸ் நிறுவனங்கள் வெளிநாடுகளில் உள்ள தங்களது வாடிக்கையாளர்களுக்கு மென்பொருள் ஏற்றுமதி செய்தற்கான சேவை வரியை அரசு செலுத்தும் படி சுமார் 200 நிறுவனங்களுக்கு வருவமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அபராதம்
இந்திய நிறுவனங்கள் செய்த மென்பொருள் ஏற்றுமதிக்கான சேவை வரி மற்றும் அதற்கான 15 சதவீத அபராதம் ஆகியவற்றையும் சேர்ந்து செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.
200 நிறுவனங்களுக்கு அனுப்பிய நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், இந்நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகை மட்டும் 10,000 கோடி ரூபாய்.
மின்னஞ்சல்
பொவாக வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்தும் தங்களது தேவையை மின்னஞ்சல் வாயிலாகவே அனுப்புவார்கள். இதுவே ஐடி நிறுவனங்களில் நடக்கும் வர்த்தக முறை. வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் தேவைக்கு இந்திய ஐடி நிறுவனங்கள் வடிவமைக்கும் மென்பொருள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
வருமான வரித்துறை
இந்நிலையில் வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸில் வெளிநாட்டு நிறுவனங்கள் அனுப்பும் தேவைக்கள் தான் கூட்ஸ், அதற்கு இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்வது சேவை எனக் குறிப்பிட்டுள்ளது. இதற்கு வரி செலுத்த வேண்டும் என் கூறியுள்ளது வருமான வரித்துறை.
5 வருடம்
இந்நிலையில் கடந்த 5 வருடங்களுக்கு 200 நிறுவனங்கள் ஏற்றுமதி செய்துள்ள மென்பொருள் ஏற்றுமதிக்கான சேவை வரி மற்றும் அதற்கான அபராதமும் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளார்.
மேலும் வெளிநாட்டில் இருக்கும் இந்திய நிறுவனங்களின் கிளைகளிடமும் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான வரி தொகையைக் கோரியுள்ளது வருமான வரித்துறை.
வழக்கு
வருமான வரித்துறையின் உத்தரவை எதிர்த்து வழக்குத் தொடுத்தால் கூட நிர்ணயம் செய்யப்பட்ட வரித் தொகையில் 10 சதவீதத்தை நீதிமன்றத்தில் வைப்புச் செய்ய வேண்டும். இதனை இருப்பு அறிக்கையில் தெரிவிக்கவும் கூடாது எனக் கேபிஎம்ஜி நிறுவனத்தின் மறைமுக வரிபிரிவின் தலைவர் சச்சின் மேனன் தெரிவித்துள்ளார்.
பிரச்சனை
இந்திய ஐடி நிறுவனங்களே தற்போது போட்டி உச்சத்தின் காரணமாகக் குறைந்த அளவிலான லாபத்தில் தான் வர்த்தகம் இயங்கி வருகிறது. இந்நிலையில், இதுபோன்ற அறிவிப்புகள் ஐடி நிறுவனங்களைப் பெரிய அளவில் பாதிக்கும் என வெளிநாட்டு இந்திய நிறுவன தலைவர் கூறியுள்ளார்.
இந்நிறுவனத்திற்கு 175 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது
வெளிநாட்டு வர்த்தகம்
மென்பொருள் ஏற்றுமதிகளுக்காக 18 சதவீதம் வரி செலுத்தினால் ஏந்தொரு இந்திய நிறுவனமும் வெளிநாடுகளில் வர்த்தகம் செய்ய முடியாது. காரணம் குறைந்த அளவிலான லாபம் மட்டுமே தற்போது இதில் பெரும் பகுதியை வரியாகச் செலுத்துவதன் மூலம் வர்த்தகம் செய்ய ஏதுவாக இருக்காது.
ஐடி ஊழியர்கள் சோகம்..!
குஷியில் ஐடி நிறுவனங்கள்!


Click it and Unblock the Notifications