அண்ணன் தம்பிக்கு மத்தியில் இவ்வளவு வித்தியாசமா? பாவம் அனில் அம்பானி

திருபாய் அம்பானி கட்டிய ரிலையன்ஸ் கோட்டை, குடும்பம் மற்றும் நிர்வாகப் பிரச்சனையின் காரணமாக அவரது வாரிசுகளாக முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி ஆகியோருக்குப் பிரித்துக்கொடுக்கப்பட்டது. இந்தப் பிரிவுக்குப் பின் இவர்களது வளர்ச்சி மற்றும் வர்த்தகத்தைக் கவனித்தால் இருவருக்கும் மத்தியிலான மிகப்பெரிய வித்தியாசம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

இந்திய வர்த்தகச் சந்தைக்கு உதாரணமாக விளங்கிய ரிலையன்ஸ் சாம்ராஜியத்தின் இன்றைய நிலை என்ன தெரியுமா..?

 2006இல் பிரிவு..

2006இல் பிரிவு..

திருபாய் அம்பானியின் மறைவிற்குப் பின்னர், சகோதரர்களுக்கு மத்தியிலான சண்டை முற்றிவிட அவர்களுடைய தாய் முன்னிலையில் சொத்துக்களும், வர்த்தகமும் பிரிக்கப்பட்டது.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

இந்தச் சொத்து மற்றும் வர்த்தகப் பிரிவனை மூலம் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, உற்பத்தி, மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் ஆகியவற்றின் வர்த்தகமும், இதனைச் சார்ந்துள்ள நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீயல் இன்பராஸ்டக்சர் ஆகியவை மூத்த சகோதரரான முகேஷ் அம்பானிக்குக் கிடைத்தது.

அனில் அம்பானி

அனில் அம்பானி

இதன் மூலம் ரிலையன்ஸ் குழுமத்தில் உள்ள ரிலையன்ஸ் இன்பரா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் கேபிட்டல், ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் நாவல், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ், ரிலையன்ஸ் நிப்பான் அஸ்ஸர்ட் மேனேஜ்மென்ட் ஆகிய நிறுவனங்களும் அதன் வர்த்தகமும் அனில் அம்பானிக்குக் கிடைத்தது.

 முகேஷின் கடன்

முகேஷின் கடன்

முகேஷ் அம்பானியின் வர்த்தகம் அனைத்தும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பெயரில் இயங்குகிறது. சமீபத்தில் முகேஷ் அம்பானி பெரிய முதலீட்டில் டெலிகாம் சேவை நிறுவனத்தைத் துவங்கியதன் காரணமாக இந்நிறுவனத்தின் கடன் அளவு தற்போது 1,96,601 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

விருஷ்கா-வின் சொத்து மதிப்பை கேட்டா ஆடிப்போயிருவீங்க..!

அனிலின் கடன்

அனிலின் கடன்

அனில் அம்பானி கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்களின் கடன் அளவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதிலும் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் கடன் கடந்த 5 வருடத்தில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோல் ரிலையன்ஸ் இன்ப்ராஸ்டக்சர், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் கடனும் அதிகளவிலான உயர்வை சந்தித்துள்ளது.

தோராயக் கணக்கு

தோராயக் கணக்கு

ரிலையன்ஸ் இன்ப்ராஸ்டக்சர் - 25,000 கோடி ரூபாய்
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் - 45000 கோடி ரூபாய்
ரிலையன்ஸ் பவர் - 28,000 கோடி ரூபாய்

எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அனைத்தையும் விட நிறுவனங்களின் வளர்ச்சியும் பெரிய அளவில் இல்லை என்பதால் கடன் பிரச்சனைகள் தற்போது அனில் அம்பானிக்கு பெரிய சிக்கலாக உள்ளது.

 

முகேஷ்-இன் வளர்ச்சி

முகேஷ்-இன் வளர்ச்சி

கடந்த 10 வருட கணக்கீட்டில் மும்கேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சராசரி வளர்ச்சி அளவீடுகள்.

விற்பனை - 11.2 சதவீதம் வளர்ச்சி
லாபம் - 9.4 சதவீதம் வளர்ச்சி
ரிட்டன்ஸ் - 17.8 சதவீதம் வளர்ச்சி

 

அனில்-இன் வளர்ச்சி

அனில்-இன் வளர்ச்சி

விற்பனை - 9.4 சதவீதம் வளர்ச்சி
லாபம் - 12.6 சதவீதம் வீழ்ச்சி
ரிட்டன்ஸ் - 1.7 சதவீதம் வீழ்ச்சி

சந்தை மதிப்பு

சந்தை மதிப்பு

முகேஷ் அம்பானி கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்களின் சந்தை மதிப்பு

பிரிவுக்குப் பின் : 96,668 கோடி ரூபாய் (Market cap)
இப்போதைய நிலை : 5,90,500 கோடி ரூபாய்
வளர்ச்சி : கிட்டத்தட்ட 6 மடங்கு வளர்ச்சி

 

அனில் அம்பானி கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு

அனில் அம்பானி கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு

பிரிவுக்குப் பின் : 56,600 கோடி ரூபாய் (Market cap)
இப்போதைய நிலை : 47,000 கோடி ரூபாய்
வளர்ச்சி : 17% வீழ்ச்சி

பிரிவுக்கு இதுதான் காரணம்..

பிரிவுக்கு இதுதான் காரணம்..

விருஷ்கா

விருஷ்கா

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+