தனிநபர், குடும்பம், சிறிய நிறுவனம் முதல் பெரிய நிறுவனம் வரையில், கார்ப்பரேட் என அனைத்து தரப்பினரும் ஒருகட்டத்தில் வராக்கடன் அல்லது செயல்படா சொத்துகள் மூலம் வங்கி மற்றும் மக்கள் பணத்தைத் திவாலாக்கி விடுகின்றனர்.
உதாரணமாகத் தற்போது கிங்பிஷர் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையாவை எடுத்துக்கொள்ளலாம்.
ஐபிசி மசோதா
இத்தகைய சூழ்நிலையில் உரிய நபர்களிடம் இருந்து மக்கள் அல்லது வங்கிகள் இழந்த பணத்தைத் திரும்பப்பெறும் சட்ட விதிமுறைகளைத் தான் Insolvency and Bankruptcy Code என அழைக்கப்படுகிறது.
நிதியமைச்சர்
இந்திய வங்கிகளில் வராக்கடன் மற்றும் செயல்படா சொத்துக்களின் மதிப்பு ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வரும் நிலையில், இதனை அரசு இரும்பு கரம் கொண்டு கட்டுப்படுத்தவும் முறையாக வசூல் செய்யும் பணிகளில் ஈடுப்படவும் மத்திய நிதியமைச்சர் ஐபிசி மசோதாவில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார்.
ராம்நாத் கோவிந்த்
ஐபிசி மசோதாவில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக நேற்று அனுப்பப்பட்டது. இந்நிலையில் இதற்கான ஒப்புதலைக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அளித்துள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
விஜய் மல்லையா
இப்புதிய மாற்றத்தின் மூலம் விஜய் மல்லையா போல வராக் கடன் மற்றும் செயற்படா சொத்துகளின் வரலாற்றைக் கொண்டுள்ளவர்களிடம் இருந்து கடன் அல்லது பணத்தை எளிமையாகவும் உறுதியாகவும் நின்று வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications