ஆப்பிள் நிறுவனம் முதன் முறையாகச் சென்னை ஐஐடி மாணவர்களைப் பணிக்கு எடுக்க உள்ளது. ஆப்பிள் மட்டும் இல்லாமல் ஆதார, நாஸ்டாக் உள்ளிட்ட நிறுவனங்களும் ஐஐடி மாணவர்களைப் பணிக்கு எடுக்கின்றன.
சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 20கும் மேற்பட்ட நிறுவனங்கள் புதிதாக நேர்காணலுக்கு ஐஐடி சென்னைக்கு நேர்காணலில் பணிக்கு எடுக்க வர உள்ளதாம்.
மொத்த நிறுவனங்கள்
சென்ற ஆண்டு 250 நிறுவனங்கள் நேர்கனல் மூலம் பணிக்கு ஆட்களை எடுத்தன. ஆனால் இந்த ஆண்டு 270 நிறுவனங்கள் 400க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிக்கு எடுக்க உள்ளதாம்.
நேர்காணல்
சென்னை ஐஐடி-ல் 2017-2018 நிதி ஆண்டில் முதற்கட்டமாக நேர்காணல் டிசம்பர் 1 முதல் 10 வரை ஒரு நாள் விடுமுறை உடன் பணிக்கு மாணவர்களைத் தேர்வு செய்ய உள்ளன.
பிரிவுகள்
மாணவர்களைப் பணிக்கு எடுக்கும் நிறுவனங்களில் 43 சதவீதத்தினர் பொறியியல் / R & D துறையிலும், ஃபினான்ஸ் / அனலிட்டிக்ஸ் / கன்சல்டங் துறையில் 25 சதவீதமும், ஐடி துறையில் 32 சதவீதமும் பணிக்கு ஊழியர்களை எடுக்கின்றனர். அதுமட்டும் இல்லாமல் 50-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறன.
பதிவு செய்த மாணவர்கள்
ஐஐடி-ல் 1,100 மாணவர்கள் இந்த நேர்காணலுக்குப் பதிவு செய்துள்ளனர். சுமார் 35 மாணவர்கள் ஒத்திவைக்கப்பட்ட வேலை வாய்ப்புகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர், ஏனெனில் அவர்கள் ஸ்டார்ட் அப் தொடங்கும் முயற்சிகளையோ அல்லது உயர்நிலைப் படிப்பிற்கோ விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
வெளிநாட்டுப் பணிகள்
19 நிறுவனங்கள் சர்வதேச பணிகளுக்கு ஊழியர்களைப் பணிக்கு எடுத்துள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை ஆசிய நாடுகளான ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் தைவான் போன்ற நாடுகளுடன் அமெரிக்காவும் உள்ளது.


Click it and Unblock the Notifications