இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்துத் துறையாக விளங்கும் இந்திய ரயில்வே துறை கடந்த 2 வருடத்தில் மின்சாரப் பயன்பாட்டில் சுமார் 5,636 கோடி ரூபாயை மிச்சப்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 2015-அக்டோபர் 2017 வரையிலான காலத்தில் மட்டும், இந்திய ரயில்வே துறை ஓபன் ஆக்சிஸ் அமைப்புகள் மூலம் சுமார் 5,636 கோடி ரூபாய் வரையிலான செலவுகளைக் குறைத்துப் பணத்தை மிச்சப்படுத்தியுள்ளது. அடுத்த வருடத்தில் இதன் அளவு 41,000 கோடி ரூபாயாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இக்காலகட்டத்தில் வர்த்தகம் மற்றும் சேவை என் எதுவும் மாற்றாமலேயே ஓபன் ஆக்சிஸ் அமைப்புகள் மூலம் மின்சாரத்தைப் பெற்ற காரணத்தால் பணத்தை மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முடிவிற்குள் இதன் அளவு 6,927 கோடி ரூபாய் வரையில் உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மின்சாரச் சட்டம் 2003இன் கீழ் 1மெகாவாட் லோடுக்கு அதிகமாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் ஒரு அமைப்பு அல்லது நிறுவனம் நேரடியாகச் சந்தையில் இருந்து மின்சாரத்தைப் பெறலாம். இதனை அடிப்படையாகக் கொண்டு ஓபன் ஆக்சிஸ் அமைப்புகள் தற்போது இந்திய ரயில்வே துறை மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் கர்நாடகா ஆகிய 7 மாநிலங்கள் மற்றும் தாமோதர் வேலி கார்பரேஷன் ஏரியா நிறுவனத்திடம் இருந்து நேரடியாக மின்சாரத்தைப் பெறுகிறது.


Click it and Unblock the Notifications