இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ரயில்வே துறையின் வளர்ச்சிக்காகச் சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியுதவியைச் செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த முதலீட்டுக்கான உத்திரவாதம் கோருதல் மற்றும் இதர கட்டுப்பாடுகளை நிதியமைச்சகம் முழுமையாக நீக்க உத்தரவிட்டுள்ளது.
ஒப்பந்தம்
2 வருடங்களுக்கு முன்பு எல்ஐசி நிறுவனம் இந்திய ரயில்வே துறையின் IRFC நிறுவனத்தின் வாயிலாகப் பத்திர வெளியீட்டின் மூலம் முதலீட்டைத் திரட்டுவதற்காக ஒப்பந்தம் செய்தது.
25 சதவீத முதலீடு
எல்ஐசி நிறுவனத்தின் விதிகள் படி உள்கட்டமைப்புத் துறையில் இருக்கும் எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அதன் மொத்த மதிப்பில் 25 சதவீதம் வரையில் மட்டுமே அதிகப்படியாக முதலீடு செய்ய வேண்டும் நிர்ணயம் செய்துள்ளது.
IRFC நிறுவனத்தில் ஏற்கனவே 25 சதவீதம் அளவிற்கு முதலீடு செய்துள்ள நிலையில் தற்போது கூடுதலாகச் செய்யப்படும் முதலீட்டுக்கும், பத்திர உத்திரவாதத்திற்கும் அரசின் ஒப்புதல் வேண்டும்.
மேலும் இதனைக் கெசட்டிலும் பதிவு செய்து சிறப்புப் பத்திரம் என்ற வகையில் அறிவிக்க வேண்டும்.
நவம்பர் 23
இதற்கான அறிவிப்பை நவம்பர் 23 தேதி இந்திய ரயில்வே நிதி அமைப்பில், எல்ஐசி நிறுவனம் நிர்ணயம் செய்யப்பட்ட அளவுகளை விடவும் அதிகமான அளவிற்கு முதலீடு செய்ய ஒப்புதல் அளித்தது மட்டுமல்லாமல் பத்திரத்திற்கு உத்திரவாதம் அளித்துள்ளது.
இந்தப் பத்திரங்கள் இன்சூரன்ஸ் சட்டம் பரிவு 2(3) விதிகளுக்கு உட்பட்டு வெளியிடப்படுகிறது.
கடன் பிரச்சனை இல்லை..
இந்திய ரயில்வே துறையில் எல்ஐசி முதலீடு செய்யும் பட்சத்தில் ரயில்வே துறை கடன் பெறும் அளவீடுகள் குறையும். அதுமட்டும் அல்லாமல் தற்போது ரயில்வே துறை மிகப்பெரிய திட்டத்தில் பணியாற்றிக்கொண்டு இருக்கும்போது இத்தகைய நிதியுதவி பெரியளவில் உதவி செய்யும்.
10 லட்சம் கோடி
அடுத்த 5 வருடத்தில் இந்திய ரயில்வே துறையில் மட்டும் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யும் அளவிற்குத் திட்டங்களையும் அதற்கான தேவைகளையும் உருவாக்கியுள்ளதாகப் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மொத்த சொத்து மதிப்பு
எல்ஐசி நிறுவனம் தற்போது 24.74 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சொத்துக்களை நிர்வாகம் செய்து வருகிறது. அதேபோல் மொத்த இன்சூரன்ஸ் துறையில் 80 சதவீத வர்த்தகத்தை எல்ஐசி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலீடு
எல்ஐசியின் மொத்த முதலீட்டில் 5.74 லட்சம் கோடி ரூபாய் பங்குச்சந்தையிலும், 19 லட்சம் கோடி ரூபாய் கடன் சந்தையிலும் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications