ரிலையன் ஜியோ நிறுவனத்தின் வணிகச் சேவை துவங்கப்பட்டு ஒரு முடிவடைந்த உள்ள நிலையில் 139 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் இலவச இணையதளம் மற்றும் குரல் அழைப்புகள் ஆஃபர் ஆகும்.
இதனால் தொலைத்தொடர்பு துறையில் மிகப் பெரிய உச்சத்தில் இருந்து ஏர்டெல், வோடாபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் ஆடிப்போயின.
கூடுதல் முதலீடு
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச சலுகை முடிவால் போட்டி நிறுவனங்களுக்கு 50 பில்லியன் டாலர் வரை கூடுதல் முதலீடு தேவைப்பட்டது எனப் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் கூறியுள்ளார்.
வெளிநாட்டு முதலீடுகள்
ஜியோவின் போட்டியை சமாலிக்கு இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 40 பில்லியன் டாலர் முதல் 50 பில்லியன் டாலர் வரை தேவைப்பட்டதாகவும் இந்த முதலீடுகள் பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏர்செல் நிறுவனம்
ஏர்செல் நிறுவனத்தினை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைக்குப் பார்தி ஏர்டெல் நிறுவனம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஏர்செல் நிறுவனத்துடன் இணைய முயன்று அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிசேஷன் தோற்றுப்போனது குறிப்பிடத்தக்கது.
ஏர்செல் நிறுவனம் விற்பனைக்கு வரும் எனில் அது ஏர்டெல், வோடாபோன் அல்லது ஐடியா நிறுவனங்கள் தான் வாங்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. எனவே ஏர்செல் நிறுவனத்தினை வாங்கும் பேச்சுவார்த்தையில் நாங்கள் கண்டிப்பாக இருப்போம் என்று ஏர்டெல் தரப்புக் கூறுகிறது.
ஏர்செல் 4ஜி ஸ்பெக்டர்ம்
சென்ற ஆண்டு ஏர்செல் நிறுவனத்தின் 4ஜி அலைக்காற்றுகளை நாடு முழுவதிலும் 22 சர்க்கிலில் இருந்து 3,500 கோடி ரூபாய் கொடுத்து ஏர்டெல் நிறுவனம் வாங்கியது. இதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்திற்கு 4ஜி சேவை வழங்குவதில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
போட்டி நிறுவனங்கள் எடுத்த அதிரடி முடிவுகள்
ஒரு பக்கம் ஜியோ சூறாவளியினைச் சமாளிக்க ஐடியா மற்றும் வோடாபோன் நிறுவனங்கள் இணைந்தன. பிப்ரவரி மாதம் டெலினார் நிறுவனத்தினை ஏர்டெல் நிறுவனம் கையகப்படுத்தியது. அன்மையில் டொகோமோ உடன் இணைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் ஜியோ நிறுவனத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவுகளே ஆகும்.
வருவாய்
ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து 6 காலாண்டுகளாக வருவாய்ச் சரிந்துள்ளதாகத் தெரிவித்து வருகிறது. ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மட்டும் லாபம் 76.5 சதவீதம் சரிந்து 343 கோடியாகப் பதிவு செய்துள்ளது. இதுவே சென்ற ஆண்டு ஏர்டெல் நிறுவனம் சேவையினைத் துவங்கிய போது 1,1461 கோடியாகப் பதிவு செய்து இருந்தது.
பயனர் மூலம் வரும் வருவாய்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்குச் சராசரியாக ஒரு பயனர் மூலமாக 156.4 ரூபாயாக வருவாய்க் கிடைக்கிறது. இதுவே ஏர்டெல் நிறுவனத்திற்கு 154 ரூபாயாக உள்ளது. ஐடியா நிறுவனத்திற்கு 141 ரூபாயாக உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ
சென்ற ஏப்ரல் மாதம் முதல் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சேவைக்குக் கட்டணம் வசூலிக்கத் துவங்கியதால் இன்னும் இரண்டு காலாண்டில் விலைப் போர் குறைந்து நிலையாகிவிடும் என்று சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.
கடன்
டெலிகாம் நிறுவனங்கள் 3 லட்சம் கோடி வரை கடனில் சிக்கித் தவித்து வரும் நிலையில் டெலிகாம் கமிஷன் ஸ்பெக்டர்ம் கட்டணத்தினைச் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்து அறிவித்தது. இதனை ஜியோ கடுமையாக எதிர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மார்சு 31 வரை 4.5 லட்சம் கோடி கடனில் இருந்தது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications