உலகத் தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள அமரிக்க அதிபர் மகள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆலோசகருமான இவங்கா டிரம்ப் அவர்களை ஹைதராபாத்தில் நடக்க இருக்கும் மாநாட்டில் மோடி அவர்கள் சந்தித்துப் பேசினார்.
இவர்களுடன் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான ரவீஷ் குமார் ஆகியோர் உலகத் தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

முன்பு பிற்பகல் ஹைதராபாத் சர்வதேச மாநாட்டு மையத்தில் பிரதமர் மோடி, இவாங்கா டிரம்ப் மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் ஆகியோருடனான தேநீர் விருந்து நடைபெற்றது. இதில் இவர்கள் அனைவரும் இன்றை நிகழ்வுகள் குறித்துக் கலந்துரையாடினர்.
இவாங்கா டிரம்ப் அவர்கள் பெண் தொழில் முனைவோரை முன்னிறுத்தி நடக்க இருக்கும் இந்த உலகத் தொழில் முனைவோர் மாநாடு மிக முக்கியமானது என்றும் முக்கியப் பெண் தொழில் முனைவோரையும் அறிமுகப்படுத்திப் பேசினார்.
இவங்கா டிரம்ப் அவர்களின் உரையினை அடுத்து 2017 உலகத் தொழில் முனைவோர் மாநாட்டை நடத்துவதில் பெருமைப்படுகிறோம் என்றும் தெற்காசிய நாடுகளில் இந்த மாநாடு முதல் முறையாக நடைபெறுகிறது என்றும் தெரிவித்துத் தனது உறையினைத் தொடர்ந்தார்.
இவாங்கா டிரம்பின் வருகையினை அடுத்து ஹைதராபாத் முழுவதும் 10,000க்கும் மேற்பட்ட காவால் துறையினைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்


Click it and Unblock the Notifications