இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை 2017 நவம்பர் 30-ம் தேதி திரும்பப் பெற உள்ளது.
மும்பை பங்கு சந்தையில் நடக்க உள்ள இந்தப் பைபேக் திட்டம் 2017 நவம்பர் 30-ம் தேதி துவங்கி டிசம்பர் 14 வரை தொடர்ந்து நடக்க உள்ளது.
திரும்பப் பெறும் பங்குகள்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 36 ஆண்டுக்கால வரலாற்றில் முதன் முறையாக 11.30 கோடி பங்குகளை ஒன்றுக்கு 1,150 ரூபாய் என வாங்க உள்ளது.
நிறுவனர்கள் கோரிக்கை
இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகளைத் திரும்பப் பெற்று மூலதனத்தினை அதிகரிக்க வேண்டும் இணை நிறுவனர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை வைத்து வந்தது நாளை நிறைவேற உள்ளது.
வருவாய்
இன்ஃபோசிஸ் நிறுவனம் இந்தப் பங்குகளை எல்லாம் திரும்ப வாங்கும் போது வரும் காலங்களில் அவர்களது வருவாய் அதிகரிக்கும்.
இன்றைய நிலை
நாளை முதல் பைபேக் துவங்க உள்ள நிலையில் இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகள் இன்று பிற்பகல் 2:56 மணி நிலவரத்தின் படி 982.10 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
பங்குகளைத் திரும்பப் பெறும் பிற நிறுவனங்கள்
இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனமும் 16,000 கோடி ரூபாய் மதிப்பாலான பங்குகளைத் திரும்பப்பெறச் சென்ற ஆண்டு அறிவித்து. இதே போன்று காக்னிசென்ட், விப்ரோ மற்றும் மைண்ட் ட்ரீ போன்ற நிறுவனங்களும் பங்குகளைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளன.


Click it and Unblock the Notifications