மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் உயர் கல்வி நிதி அமைப்புப் புதன்கிழமை இந்தியாவில் இருக்கும் 5 ஐஐடி கல்லூரிகள் மற்றும் ஒரு என்ஐடி கல்லூரிகளுக்கான வட்டியில்லா 2,000 கோடி ரூபாய் கடனை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
டிவீட்
ஆராய்ச்சி மற்றும் புதுமைக்காக 6 கல்லூரிகளுக்கு வட்டியில்லாத 2,066.73 கோடி ரூபாய் அளவிலான கடன் அளிக்கப்பட்டுள்ளது என மனித துறை அமைச்சர் பிரகாஷ் டிவீட் செய்தார்.
கல்லூரிகள்
இந்நிலையில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள 2,066.73 கோடி ரூபாய் கடன் ஐஐடி பாம்பே, டெல்லி, மெட்ராஸ், கார்க்பூர், கான்பூர் மற்றும் என்ஐடி சூரட்கல் ஆகிய கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஒதுக்கீடு
இதில் 1028.73 கோடி ரூபாய் ஆராய்ச்சி மற்றும் கல்விக்காகவும், 1038 கோடி ரூபாய் உள்கட்டமைப்பிற்காகவும் செலவிடப்பட உள்ளது என மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உயர் கல்வி நிதி அமைப்பு
மத்திய அரசு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கனரா வங்கி உடனான கூட்டணியில் இப்புதிய உயர் கல்வி நிதி அமைப்பை உருவாக்க ஒப்புதல் அளித்தது.
இந்த அமைப்பு இந்தியாவின் கல்லூரி மேம்பாடுகளுக்காக வெளிச் சந்தையில் கடன் பெறுவதன் மூலம் சுமார் 20,000 கோடி ரூபாய் அளவிலான தொகையைச் செலவிட உள்ளது.


Click it and Unblock the Notifications