இந்தியாவில் வீடு மற்றும் வீட்டு மனைகள் மக்களுக்கு மலிவானதாகக் கிடைக்க வேண்டும் என்றும், ரியல் எஸ்டேட் துறையில் புழங்கும் அதிகப்படியான கருப்புப் பணத்தை முழுமையாகக் களைய வேண்டும் என்பதற்காக மோடி தலைமையிலான அரசு இத்துறையின் மீதும், இத்துறை நிறுவனங்கள் மீதும் தொடர்ந்து பல கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது.
இதன் வாயிலாக ரியல் எஸ்டேட் துறையின் மீதான பிடியை மேலும் வலிமையானதாக ஆக்கும் வகையில் புதிய கட்டுப்பாட்டைக் கொண்டு வர மோடி அரசு ஆலோசனை செய்து வருகிறது. இதனால் மக்களுக்குப் பெரிய அளவிலான நன்மை கிடைக்கும்.
RERA விதிமுறைகள்
ரியல் எஸ்டேட் மீதான கட்டுப்பாடுகளின் ஒருபகுதியாக RERA விதிமுறைகள் உண்மையிலேயே இத்துறை நிறுவனங்களுக்குப் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். RERA மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் பெரிய அளவிலா பணப்புழக்கமுமில்லை அதேபோல வர்த்தகமும் பெரிய அளவில் இல்லை.
மோடி அரசு
இத்தகைய சூழ்நிலையில் ரியல் எஸ்டேட் துறையில் இருக்கும் நிறுவனங்கள் ஏமாற்றும் முக்கியமான வழியைக் கண்டறிந்து அதனை முழுமையாகத் தடை செய்ய மோடி அரசு முடிவு செய்துள்ளது.
கருப்புப் பணம்
இந்திய ரியல் எஸ்டேட் துறையில் கருப்புப் பணம், கருப்புப் பண முதலைகளும் அதிகளவில் இருப்பதாக மத்திய அரசு பல முறை கூறியுள்ளது. அதிகளவிலான கருப்பு பணத்தின் உள்ளீடு காரணமாகவே தற்போது நாட்டின் அனைத்து இடங்களிலும் வீடு மற்றும் வீட்டு மனைகளின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
இதனால் நடுத்தர மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
புதிய கட்டுப்பாடு
RERA மற்றும் ஜிஎஸ்டி பின்னரும் இத்துறையை அரசின் தீவர கண்காணிப்பில் வைக்கவும், மக்களுக்கு மலிவான விலைக்குக் கிடைக்கும் வகையில் அமையப் புதிதாக ஒரு கட்டுப்பாட்டை விதிக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு.
தயாராக இருக்கும் வீடுகள்
பொதுவாக ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கட்டி முடித்திருக்கும் வீடுகளில் விற்காமல் அல்லது காரணத்துடன் விற்காமல் இருக்கும் வீடுகளை வாடகைக்கு விடும் வழக்கத்தைக் கொண்டுள்ளது. இதன் மூலம் வரும் வருமானத்தை லாபமாகவோ அல்லது இதர வருமானமாகவோ கணக்கில் காட்டுகிறது.
வரி இல்லை
இதில் என்ன விஷயமென்றால் விற்பனை ஆகாத வீட்டிற்கு நிறுவனங்கள் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை என்பதால் இத்துறையில் இருக்கும் நிறுவனங்கள் வீடுகளை வாடகைக்கு விடுகிறது.
அனைத்து வீட்டுக்கு வரி..
ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கட்டி முடிக்கப்பட்டு விற்பனை ஆகாமல் வைத்திருக்கும் வீடுகளுக்கும் இனி வரி செலுத்த வேண்டும் என்னும் யோசனையை வருமான வரித்துறை, நிதியமைச்சகத்திற்கு யோசனை கூறியுள்ளது.
வருவாய்
இதனை வருவாய் துறை ஆய்வு செய்து நடைமுறைக்குக் கொண்டு வந்தால், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வைத்திருக்கும் வீடுகளை அனைத்தும் விற்பனைக்கு வருவது மட்டுமல்லாமல் வரிச் செலுத்துவதில் இருந்து தப்பிக்க மலிவான விலைக்கு வீடுகள் கிடைக்கும்.
இதன் மூலம் புதிதாகக் கட்டப்படும் வீடுகளின் விலையில் கணிசமாகக் குறையும் என நம்பப்படுகிறது.
விலை ஏற்றம்
ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சில நேரங்களில் வேண்டுமென்றே வீடுகளை விற்காமல், சந்தையில் இதன் விலை ஏறிய பின்பு விற்கலாம் என்று வைத்திருப்பதும் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் இத்தகைய வீடுகள் எப்போது விற்பனைக்கு உள்ளது என்றே கணக்கில் காட்டப்படுவதால் இதற்கு வரி விலக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பெற்று வருகிறது.
அதிரடி உயர்வு
இந்திய ரியல் எஸ்டேட் சந்தையில் 2017 மார்ச் மாத முடிவில் கட்டி முடிக்கப்பட்டு விற்பனைக்கு இருக்கும் வீடுகளின் அளவு மட்டும் 734 மில்லியன் சதுரடி கிட்டத்தட்ட 7,34,000 வீடுகள். இது ஜூன் மாதத்தில் அதாவது வெறும் 3 மாத காலத்தில் 7,60,000 வீடுகளாக உயர்ந்துள்ளது.
ஆதார் இணைப்பு
தற்போது வீடு, நிலம் என எது வாங்கினாலும் மக்கள் ஆதார் எண்-ஐ இணைப்பது கட்டாயமாக்கியுள்ளதால் கருப்புப் பண ஆசாமிகளின் தலையில் தற்போது அதிகளவில் குறைந்துள்ள என்றே சொல்லாலாம். இதனாலேயே இத்துறையில் வர்த்தகம் தற்போது அதிகளவில் குறைந்துள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications