பஜாஜ் ஆடோ நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நவம்பர் மாதம் 3,26ம்458 வாகனங்களை விற்றுள்ளதாகவும், இதுவே சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 2,69,948 வாகனங்கள் விற்பனை செய்துள்ளதாகவும், இது 21 சதவீத உயர்வு என்றும் அறிவித்துள்ளது.
மோட்டார் சைக்கில் விற்பனையில் சென்ற ஆண்டு 2,37,757 வாகனங்கள் விற்பனை செய்ததாகவும், இதுவே 2017 நவம்பர் மாதம் 2,63,970 வாகனங்கள் விற்பனை செய்துள்ளதாகவும் இது 11 சதவீத உயர்வு என்றும் மும்பை பங்கு சந்தைக்குத் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

வணிக வாகன விற்பனையில் சென்ற ஆண்டு 31,191 வாகனங்கள் விற்பனை செய்ததாகவும், இதுவே 2017-ம் ஆண்டு 94 சதவீதம் உயர்ந்து 62,488 வாகனங்கள் விற்பனை செய்துள்ளது.
சென்ற ஆண்டு 1,15,425 வாகனங்கள் ஏற்றுமதி செய்ததாகவும், இதுவே இந்த அண்டு 27 சதவீதம் உயர்ந்து 1,46,623 வாகனங்கள் ஏற்றுமதி செய்துள்ளனர்.
பஜாஜ் ஆடோ பங்குகள் இன்று பிற்பகல் 1:27 மணி நிலவரத்தின் படி 21.70 புள்ளிகள் சரிந்து 3,290.00 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications