மும்பை: இந்திய பொருளாதாரம் 2024-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாகி 5 டிரில்லியன் டாலர்களை எட்டும் என்றும், 21ம் நூற்றாண்டில் சீனாவினை விட அதிக வளர்ச்சியினை இந்தியா பெறும் என்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவரான முகேஷ் அம்பானி இன்று தெரிவித்தார்.
ஆங்கில நாளிதழ் ஒன்று நடத்தினை நிகழ்வில் பங்கேற்ற முகேஷ் அம்பானி தான் 20 வருடங்களுக்கு முன்பே 2004-ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் 500 பில்லியன் டாலரை எட்டும் என்று கணித்ததாகத் தெரிவித்தார்.
தற்போது தனது கணிப்பு 2024-ம் ஆண்டுச் சாத்தியப்பட உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜிடிபி
தற்போது இந்தியாவின் ஜிடிபி கிட்டத்தட்ட 2.5 டிரில்லயன் டாலராக உள்ளது என்றும் இது உலகளவில் 6வது இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூன்று மடங்கு ஜிடிபி வளர்ச்சி எப்போது கிடைக்கும்?
இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி அடுத்த 10 வருடத்தில் மூன்று மடங்கு அதிகரித்து 7 டிரில்லியன் டாலராக அதிகரிக்க வாய்ப்புள்ளதா என்ற கூள்விக்கு, வாய்ப்பு உள்ளது என்றும், 2030-ம் ஆண்டுக்குள் 10 டிரில்லியன் டாலரி அடைய முடியும் என்றும் தெரிவித்தார்.
அமெரிக்கா, சீனா
அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளை விட இந்தியா வளமானது என்றும் அடுத்து நாங்கள், விவசாயம், போன்ற துறைகளில் அதிகக் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
அடுத்த 30 ஆண்டு
வர இருக்கும் அடுத்த 30 ஆண்டுகள் இந்தியாவிற்கானது. 21-ம் நூற்றாண்டு முதல் சீனாவை விட வேகமான வளர்ச்சியினை இந்தியா பெறும் என்றார்.
இந்தியா
இந்தியா ஒரு மேம்பட்ட மற்றும் வேறுபட்ட மாதிரியை வழங்கும், இது சமமான மற்றும் முழுமையான வளர்ச்சியை உருவாக்கும் என்று முகேஷ் அம்பானி கூறினார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications